என் மலர்
செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நாடாகவே பாகிஸ்தான் இருக்கிறது - நிர்மலா சீதாராமன்
பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும் செய்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
சென்னை:
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்து, நிதியுதவியும், ராணுவ ஆதரவும் அளித்து நமக்கு எதிராக ஏவிவிடும் நாடாகவே பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதைப்போல் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் மீது நாம் தாக்குதல் நடத்தினோம். இது ராணுவ நடவடிக்கை அல்ல. பாகிஸ்தான் செய்திருக்க வேண்டிய பணியை நாம் செய்து முடித்தோம். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயிற்சி அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களை நமது விமானப்படையை வைத்து தகர்த்திருக்கிறோம்’ என தெரிவித்தார். #Pakistan #terroriststrained #NirmalaSitharaman
Next Story






