search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "ஹன்சிகா"

  • டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
  • கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள 'கார்டியன்' படம் மார்ச் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி, 'மொட்டை'ராஜேந்திரன், பிரதீப் ராயன்,'டைகர் கார்டன்' தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே.ஏ.சக்திவேல் மேற்கொள்ள படத்தொகுப்பாளராக எம். தியாகராஜன் பணியாற்றியுள்ளார்.

  குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி இருக்கும் கார்டியன் படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ். "சமீப காலத்தில் ஹன்சிகா அவர்களுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மூன்றும் ஹாரர் திரைப்படங்களாக அமைந்தது."

  "முன்பெல்லாம் கதாநாயகி வேடம் என்பது துணை கதாபாத்திரமாக இருந்தது. தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நிறைய முன்னணி நடிகைகள் நடித்து வருகிறார்கள். அதில் ஹன்சிகாவும் ஒருவர். மூன்று திரைப்படங்களிலும் வெவ்வேறு விதமான நடிப்பை கொடுத்துள்ளார்."

  "இந்த படம் வெறும் ஹாரர் திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வு பூர்வமான திரைக்கதையுடனும் உருவாகியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அவர் எங்களை வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி. அவர் இயக்கியது போன்ற குடும்ப பாங்கான, நகைச்சுவையான திரைப்படங்கள் மிகவும் குறைவாக வெளியாகின்றன. அதற்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது", என்று தெரிவித்தார்.

  • நடிகை ஹன்சிகா 'மை நேம் இஸ் ஸ்ருதி' படத்தின் நடித்துள்ளார்.
  • இவருக்கு வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள்.

  ஆந்திர மாநிலம் என். டி.ஆர். மாவட்டம் விஜய வாடாவில் பிரசித்தி பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகை ஹன்சிகா நேற்று தரிசனம் செய்ய வந்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார். வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள். கோவில் நிர்வாகிகள் ஹன்சிகாவுக்கு அம்மன் உருவப்படம், பிரசாதம் வழங்கினார்கள்.

  வளையல் அலங்காரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. மை நேம் இஸ் ஸ்ருதி படம் எனது நடிப்பில் 17-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக விஜயவாடா வந்தோம். அனைத்து பார்வையாளர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.

  • தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ளது.
  • "கார்டியன்" டீசரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது.

  ஹன்சிகா மோத்வானி, தன்னை ஒரு திறமையான கலைஞராக தொடர்ந்து நிரூபித்து வருகிறார். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  மேலும், தெலுங்கு படமான "மை நேம் இஸ் ஸ்ருதி," விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் சுவாரஸ்யமான டிரைலர் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் படமான "கார்டியன்" டீசரும் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது. இவ்விரண்டு மொழி படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஹன்சிகா மோத்வானியின் செயல்திறன் மற்றும் நம்பிக்கைக்குரிய கதைக்களம் மிகுந்த படம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


  தனது சமீபத்திய படங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹன்சிகா, "எனது ரசிகர்களிடமிருந்து நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவால் நான் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

  'மை நேம் இஸ் ஸ்ருதி' மற்றும் 'கார்டியன்' படங்களை தவிர தெலுங்கில் 105 நிமிடங்கள் மற்றும் தமிழில் MAN போன்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு 2024-ஆம் ஆண்டு ஒரு பிளாக்பஸ்டர் ஆண்டாக இருக்கும்.

  • இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘மை3’.
  • 'மை3’ வெப்தொடருக்கு கணேசன் இசையமைத்துள்ளார்.

  இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மை3'. இந்த தொடரில் ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


  முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3  என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக  சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை, ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.


  மை3 போஸ்டர்

  ரொமாண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'மை3' வெப்தொடரை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்ய கணேசன் இசையமைத்துள்ளார். 'மை3' வெப்தொடர் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
  • இப்படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.  இந்நிலையில் பாட்னர் படத்தில் இடம்பெற்றுள்ள ராட்டி என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் 5 வருடத்திற்கு முன்பு 7அப் மெட்ராஸ் ஆல்பத்திற்காக சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  • ஹன்சிகா தற்போது ஆதியுடன் பார்ட்னர் படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.

  நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்தில் 50 படங்களை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின் 50-வது படமாகும். அதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

  இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த தொழில் அதிபர் தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா தற்போது தமிழில் நடிகர் ஆதியுடன் இணைந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள நடிகை ஹன்சிகா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த படத்தில் நான் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது மிகவும் எனக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. திருமணத்திற்கு பிறகு நான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.

  தமிழில் 5 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகும் நான் படங்களில் நடிக்க எனது கணவர் ஆதரவு அளித்து வருகிறார். அவர் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். அவர்தான் என் முதல் ரசிகர். எனது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. எனக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அவை நிறைவேறும் போது உங்களிடம் தெரிவிக்கிறேன். தமிழில் நான் 51-வது படத்தில் நடித்து முடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

  பேட்டியின் போது நிருபர்கள் ஹன்சிகாவிடம், நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாராக மாற விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த போது, "நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனாக மாற விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

  • இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'.
  • இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

  அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார்.


  இப்படத்தின் முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசினார். அதில், "ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். அந்த காட்சிக்கு நானும் இயக்குனரும் ஒப்புக் கொள்ள கேட்டு ஹன்சிகாவிடம் போராடினோம் ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு ஜாலியான படம் எல்லோரும் பாருங்கள்" என்று பேசினார்.

  இதற்கு பத்திரிகையாளர் ஒருவர், "ரோபோ சங்கர் மேடையில் இருக்கும்போதே இதை நான் கேட்டிருக்க வேண்டும். ஒரு சபை நாகரிகம் இல்லாதவர்களை மேடையில் ஏறவிடாதீர்கள். மேடையில் ஹன்சிகா ஒரே ஒரு பெண்மணி தான் இருக்கிறார். ரோபோ சங்கர் எல்லை மீறி பேசியிருக்கிறார். இந்த மாதிரியான ஆட்களை மேடையில் ஏற்றாதீர்கள். இன்று ஹன்சிகா மேடையில் சிரித்துக் கொண்டிருக்க மாதிரி இருக்கும் நாளை வேறொரு நடிகர் உட்காரும் போது காலை தொட்டு பார்க்க வேண்டும் என்று பேசுவது நீங்கள் செவித்திற்குள் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். சமூக வலைதளத்தில் நடிகையை பற்றி இழிவாக பேச இது வழிவகுக்கும்" என்று பேசினார். இந்த பேச்சிற்காக படக்குழு மன்னிப்பு கேட்டனர்.

  • ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி.
  • இவரின் அடுத்த படத்தில் பிரபல நடிகைக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

  தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏற்கனவே மகா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஹன்சிகா தோற்றம் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இன்னொரு புதிய படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்தை இகோர் இயக்குகிறார்.

  ஹன்சிகா

  ஹன்சிகா

  இதில் ஹன்சிகாவுக்கு வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆரி ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வில்லன் வேடத்துக்கு மாறும் கதாநாயகர்கள் பட்டியலில் தற்போது ஆரியும் இணைந்துள்ளார். இவரின் இந்த அடுத்த பரிணாமம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  ×