நயன்தாராவை தொடர்ந்து திருமண ஒளிபரப்பு உரிமையை விற்ற ஹன்சிகா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெரிய தொகைக்கு ஓ.டி.டி.க்கு ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.
நயன்தாராவை தொடர்ந்து திருமண ஒளிபரப்பு உரிமையை விற்ற ஹன்சிகா?
Published on

தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகா, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். ஹன்சிகாவுக்கு தற்போது திருமணம் முடிவாகி உள்ளது.

தனது நீண்ட கால நண்பரும், தொழில் பங்குதாரருமான மும்பையை சேர்ந்த சோஹேல் கதுரியா என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓ.டி.டி. தளம் விலை பேசி வந்தது.

இந்நிலையில் பெரிய தொகைக்கு ஓ.டி.டி.யில் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

ஏற்கனவே நயன்தாராவும் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை ஓ.டி.டி.க்கு விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com