என் மலர்

  சினிமா செய்திகள்

  ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலம்: நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்
  X

  ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலம்: நடிகை ஹன்சிகாவுக்கு இன்று திருமணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகை ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார்.
  • இவர்களின் திருமண நிகழ்ச்சிகள் 3 நாட்களாக கோலாகலமாக ஜெய்ப்பூர் அரண்மனையில் களைகட்டி வருகின்றன.

  தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

  இதையடுத்து புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது. இதன் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மருதாணி வைக்கப்பட்ட சிவந்த கைகளுடன் ஹன்சிகா போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

  அதன்பின் திருமண சடங்குகள் தொடங்கியது. இதில் இசை கச்சேரி கொண்டாட்டம் நடந்தது. மணக்கோலத்தில் நடிகை ஹன்சிகா-சோகைல் கதுரியா நடந்து வரும் வீடியோ இணைய தளத்தில் வைரல் ஆனது. மணமகள் உடையில் உள்ள ஹன்சிகா, சோகைல் கதுரியாவுடன் நடந்து வந்தார். பின்னர் இசைக்கு ஏற்ப உற்சாகத்துடன் ஹன்சிகா நடனமாடினார்.

  நேற்று மாலை போலோ போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை காண ஹன்சிகா, சோகைல் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்றனர். இருவரும் வெள்ளை நிற உடையில் பழமையான காரில் போலோ மைதா னத்துக்கு சென்றனர். பின்னர் இரவில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

  ஹன்சிகா-சோகைல் கதுரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடக்கிறது. முன்னதாக இன்று காலை ஹல்தி விழா தொடங்கியது. இதில் மணமக்கள் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×