மகுடஞ்சாவடி ரெயில் தண்டவாளத்தில் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் ஆண் பிணம் மீட்பு

மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மகுடஞ்சாவடி ரெயில் தண்டவாளத்தில் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் ஆண் பிணம் மீட்பு
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com