search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adventure"

    • இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது.
    • மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரதம் யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி.

    சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 180 கோடி வசூலித்த நிலையில் படத்தின் இரண்டு நாட்களுக்கான வசூல் ரிப்போர்ட் வந்துள்ளது. அதன்படி கல்கி திரைப்படம் நேற்று வரை 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில் தற்பொழுது வந்த தகவல் படி இதுவரை திரைப்படம் 415 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளனர்.

    முதல் இரண்டு நாட்களிலே இத்தனை கோடி வசூலை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முற்காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை அறிவியல் பூர்வமாக இன்றளவும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்
    • உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன், அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.

    டிராகனா, பாம்பா..? நெட்டிசன்களை குழப்பிய விசித்திர உயிரினம் - வைரல் வீடியோடிராகன்கள் உண்மையில் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. கதைகளிலும் திரைப்படங்களிலும் பிரமாண்டமானதாக சித்தரிக்கப்படும் டிராகன்கள் இன்றைய நவீன உலகில் நார்மலைஸ் ஆன ஒரு உயிரினம்.

    அறிவியல் பூர்வமாக முற்காலத்தில் டிராகன்ங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இன்றளவும் நாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் , காண்போருக்கு குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் டிராகன் போன்ற தோற்றம் கொண்ட உயிரினத்தின் வீடியோ இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.

    அந்த வீடியோவில், நீர் தொட்டி ஒன்றில் உடல் முழுதும் பச்சை வண்ணமாக உள்ள உயிரினம் தனது உடலை ஊதிப் பெருக்கி நெளிந்து கொண்டிருப்பது நாம் கதைகளில் கேட்டும் சைன்ஸ் பிக்ஷன், அட்வெஞ்சர் படங்களில் பார்த்தும் வந்த டிராகனைப் போல் அச்சு அசலாக உள்ளது.

    இந்த வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த உயிரினம் ஒரு தண்ணீர் பாம்பு ஆகும். ஆனால் மற்றைய பாம்புகளை விட வித்தியாசமான முறையில் தோற்றம் கொள்ளுவது இந்த டிராகன் விவாதத்தை நெட்டிஸன்கள் மத்தியில் மீண்டும் கிளப்பியுள்ளது 

    • தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
    • மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் லைக்குகளை குவிக்க ஆசைப்பட்டு இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்து வீடியோக்களை வெளியிட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனாலும் தினமும் வலைதளங்களில் இளைஞர்களின் சாகச வீடியோக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கான்பூர் நகரின் நவாங்கஞ்ச் பகுதியில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    அதில், நவீன மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் வாலிபர் திடீரென அந்த மோட்டார் சைக்கிள் மீது நின்று பயணம் செய்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் கதாநாயகன் கப்பலில் நிற்பதை போன்று 'போஸ்' கொடுத்தவாறு மோட்டார் சைக்கிளில் சாகச பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உன்னாவ் போலீசார் அந்த வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார்.

    அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் ஆபத்தான முறையில் பைக் ஒட்டிய வினய் என்பவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த காதல் ஜோடி பைக்கில் சாகச பயணம் செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பைக்கில் பயணம் செய்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.
    • கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

    உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

    • அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
    • சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

    அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.

    இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    • உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
    • முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மாற்று இதயம் பொருத்தினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மையத்தில் இதயம் தானம் கேட்டு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீகா குளத்தை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    இதனையடுத்து முதியவரின் இதயத்தை சிறுமிக்கு பொருத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக முதியவரின் இதயம் ஸ்ரீகாகுளம் ஜேம்ஸ் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

    அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு விமான மூலம் திருப்பதி பத்மாவதி குழந்தைகள் இதய மைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதன் மூலம் 11 வயது சிறுமி உயிர் பிழைத்தார்.

    இது இந்த ஆஸ்பத்திரியில் 10-வது வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர்.

    திருப்பதி:

    கடற்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 4-ந் தேதி சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மிச்சாங் புயல் காரணமாக 4-ந் தேதி நடைபெற இருந்த சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விமானப்படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் சாகசம் செய்தனர். விண்ணில் விமானத்தில் பறந்து தீப்பிழம்பை கக்கிய படியும், விமானங்கள் குறுக்கு நெடுக்காக சென்றும், வண்ணப் பொடிகளைத் தூவியும் சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர்.

    இதேபோல் கடற்படை வீரர்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.

    ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு ஆரவாரம் செய்தனர். 

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    ×