என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா
- இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம்.
- இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
கும்பகோணம்:
அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழும தலைவர் அன்வர்கபீர் தலைமையில் நடைபெற்றது.
தாளாளர் அப்துல்கபூர் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்து கொண்டு 881-க்கும் பட்டயங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் முழுவதும் இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப படிப்புகளை அரசு செய்து தருகின்றது.
பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.






