நெல்லையில் அ.தி.மு.க. நிர்வாகியிடம் மொபட்-ரூ.40 ஆயிரம் பறிப்பு

அப்துல் சமது பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார். அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.
நெல்லையில்  அ.தி.மு.க. நிர்வாகியிடம் மொபட்-ரூ.40 ஆயிரம் பறிப்பு
Published on

நெல்லை:

நெல்லை டவுன் காந்திமதி தெருவை சேர்ந்தவர் அப்துல் சமது (வயது60). அ.தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளரான இவர் டவுன் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இதற்காக பொருட்கள் வாங்குவதற்காக இன்று வண்ணார்பேட்டைக்கு தனது மொபட்டில் வந்தார். அப்போது மொபட்டின் பெட்டியினுள் ரூ.40 ஆயிரம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வைத்து சென்றார்.

இவர் கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே சென்ற போது அப்பகுதியில் திடீரென காரில் வந்த 2 பேர் அவரது மொபட்டை வழிமறித்தனர்.

பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு மொபட்டை எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் சமது அவ்வழியாக சென்ற ரோந்து போலீசாரி டம் தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com