search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "லாரி"

  • போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள்.
  • பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள்.

  காசா:

  பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4-வது மாதத்தை நெருங்கியுள்ளது.

  இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

  போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லாரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

  இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரி கடுமையாக சேத மடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லாரி ஒன்று செல்ல காத்திருந்தது.

  அந்த லாரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என்று தெரிவித்தது.

  சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

  பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  விழுப்புரம்:

  கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
  • சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சூளகிரி:

  சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.

  அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

  இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

  இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

  • வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது
  • 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

  நாகர்கோவில் :

  குமரி மாவட்டம் கொல் லங்கோடு பகுதியை சேர்ந்த வர் இர்வின் (வயது 50), லாரி டிரைவர். இவர் ஈரோடு பெருந்துறையில் இருந்து களியக்காவிளை அருகே பனச்சமூட்டிற்கு லாரியில் மாட்டு தீவ னங்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டார். இன்று அதிகாலையில் வட சேரி அண்ணா சிலை யிலிருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

  அப்போது எதிர்பாராத விதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட் டின் நடுவே வைக்கப்பட்டி ருந்த தடுப்பு கற்கள் மீது லாரி மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றது. இதில் லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியின் முன் சக்கரமும் உடைந்தது.

  இதைத்தொடர்ந்து லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நடுரோட் டில் லாரி தடுப்பு கற்கள் மீது ஏறி நின்றதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. இதுகுறித்து நாகர்கோ வில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த டிரை வர் இர்வினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டனர். வடசேரியில் இருந்து பார்வதிபுரம் நோக்கி சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டது. வட சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லை மற்றும் வெளியூர்க ளுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.

  ஆனால் லாரி விபத்தில் சிக்கிய பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்ட தையடுத்து போலீசார் அந்த பகுதியில் நின்று அதை சரி செய்யும் பணியை மேற் கொண்டனர். காலை நேரம் என்பதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து சென்றன.

  விபத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியை போலீசார் மேற்கொண்ட னர். லாரியில் இருந்த மாட்டு தீவன மூட்டைகள் இறக்கி அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து கிரைன் மூலமாக லாரியை அகற்றும் பணியை போலீசார் மேற் கொண்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

  விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் லாரியினுடைய ஸ்டேரிங் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக லாரி டிரைவர் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத் திற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.
  • லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

  திருவொற்றியூர்:

  டிரைலர் உரிமையாளர்கள், மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் என மொத்தம் 37 சங்கங்கத்தினர் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்க்கிங் யார்டு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

  இதையொட்டி அடையாள உண்ணாவிரதம் மணலி புதுநகர் ஆண்டார் குப்பம் பகுதியில் நடை பெற்றது.

  லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 80 சதவீத லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே டிரைலர் லாரி டிரைவர்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்த காளி, ஆசைத்தம்பி ஆகியோர் டிரைவர் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

  அப்போது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போராட்டம் அறிவித்திருப்பதால் வெளியூர் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு பண்டிகை காலம் முடிந்த பின் போராட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

  இதே போல் பல்வேறு தரப்பிலும் தீபாவளியையொட்டி போராட்டம் வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்ததால் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக டிரைலர் உரிமையாளர் சங்க நிர்வாகி எம்.எம். கோபி தெரிவித்தார்.

  இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் டிரைலர் லாரிகள் வழக்கம்போல் ஓடத் தொடங்கின.

  • லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
  • இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

  வல்லம்:

  புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் திருக்கானூர்பட்டி அருகே வல்லம் - ஒரத்தநாடு 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தது.

  அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

  லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

  அதே போல் லாரி மீது மோதிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

  இதில் அரசு பஸ் டிரைவர் வினோதன், கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த விப த்தால் அந்த பகுதியில் போக்கு வ ரத்து பாதிக்க ப்பட்டது.

  பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.

  இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
  • மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேட்டூர்:

  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (60). இவரது மனைவி சாந்தி (54).

  இவர் மேச்சேரி வீரப்பனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

  இந்த நிலையில் நேற்று மாலை சாந்தி பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி சாந்தியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் தடுமாறி விழுந்த சாந்தி டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநரான பிரபாகரன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சாலை விபத்தில் அங்கன்வாடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • . இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது
  • அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால்

  நாகர்கோவில் : பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாமுவேல் (வயது 50), லாரி டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதால் மனைவி சொரூபராணி கணவரிடம் கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதனால் மன வருத்தத்தில் இருந்த ஜெஸ்டின் சாமுவேல் கடந்த 21-ந்தேதி தனது வீட்டின் அருகே விஷ மருந்து சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து அவரது மனைவி சொரூபராணி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
  • கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவு பகுதியை அடைத்தார்.

  சீர்காழி:

  சீர்காழியிலிருந்து தூத்துக்குடி நோக்கி மீன் லாரி சென்றது.

  மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிர்சாதனபெட்டி வசதிகொண்ட அந்த லாரியிலிருந்து சாலைமுழுவதும் துர்நாற்றத்துடன் மீன்கழிவுநீர் கொட்டிக்கொண்டே சென்றது.

  இதனால் பொது மக்கள் ஆத்திரமடைந்தனர்.

  பின்னர் புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

  பின்னர் மீன் கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவுபகுதியை அடைத்தார்.

  அதன்பின்னர் பொது மக்கள் வாகனத்தை விடுவித்தனர்.

  இது குறித்து பொதுமக்கள் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.