search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதியது"

    • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.
    • சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து 25 பேர் ஆம்னி பஸ்சில் சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவில் ஊருக்கு திரும்பினர். இந்த ஆம்னி பஸ்சை சூளகிரிைய சேர்ந்த டிரைவர் மோகன் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில், கோவையில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரி திடீெரன பழுதானது. இதனால் லாரியை ஓடி வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் லாரியை உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவில் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    ஆம்னி பஸ் மோதியது

    அப்போது சுற்றுலாவுக்கு சென்று விட்டு திரும்பிய ஆம்னி பஸ் அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதனால் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அப்போது அதிகாலை என்பதால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். விபத்து நிகழ்ந்ததும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு கை, கால், முகம் உள்ளிட்ட இடங்களில் அடிபட்டு இருந்தது. வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறி துடித்தனர்.

    ஆஸ்பத்திரியில் அனுமதி

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கொண்ட லாம்பட்டி போலீசாருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தினால் பயணிகள் பதட்டத்துடன் காணப்பட்டனர். காயம் அடைந்த பயணிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
    • அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து நின்றிருந்த வாகனங்களில் மீது மோதியது.

    பல்லடம்,ஜூலை.5-

    கோவையில் இருந்து திருப்பூர் வரை செல்லும் ராஜலட்சுமி என்ற தனியார் பஸ் நேற்று வழக்கம் போல கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர் செல்வதற்காக பல்லடம் நோக்கி சுமார் 50 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருப்பூரைச் சேர்ந்த உதயகுமார்(32) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக ரமேஷ் என்பவர்இருந்தார்.

    இந்த நிலையில், பல்லடம் அரசு மருத்துவமனை அருகேஅந்த தனியார் பஸ்அதி வேகத்துடன் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள்,1அமரர் ஊர்தி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. புறச்சாலையில் செல்லும் அதே வேகத்தில் பல தனியார் பஸ்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலும் செல்கின்றன.

    இதற்கிடையே ஆம்புலன்ஸில் டிரைவர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பஸ்ஸில் முன்புறம் அமர்ந்திருந்த பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இந்த விபத்தால் கோவை திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றபோது டி.கல்லுப்பட்டி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் சின்னசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×