வாகனம் மோதி தொழிலாளி பலி

எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிளாளி மீது வாகனம் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிளாளி பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

நாமக்கல்:

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 53). கூலித்தொழிலாளியான இவர் தனது சொந்த வேலை காரணமாக கஞ்சம்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா நேற்று இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com