என் மலர்

  நீங்கள் தேடியது "in motorcycle"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆப்பக்கூடல்:

  பவானி வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). சாக்கு வியாபாரி. இவர் மனைவி மற்றும் 2 குழந்கதைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஆப்பக்கூடல் வழியாக சத்தியமங்கலம் சென்றார்.

  அப்போது ஆப்பக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்ெறாரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் நிலை தடுமாறி வெங்கடேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் காயம் அடைந்தனர்.

  இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

  இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×