அரசு பஸ் மோதி முதியவர் சாவு

அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி முதியவர் சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சாலையை கடக்க முயன்றபோது டி.கல்லுப்பட்டி நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லுப்பட்டி போலீசார் அரசு பஸ் டிரைவர் சின்னசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com