search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki"

    • ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும்.

    உலகம் முழுக்க எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன திட்டம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது.

    2030 நிதியாண்டிற்குள் கிட்டத்தட்ட எட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் எந்தெந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது.

     


    2030 ஆண்டு வாக்கில் சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்களில் 25 சதவீதம் எலெக்ட்ரிக் மாடல்களாக இருக்கும் என்றும் 75 சதவீதம் மாடல்கள் ஐ.சி. என்ஜின் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை வைத்தே சுசுகியின் முதற்கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

    • சுசுகி நிறுவனம் குறைந்த விலை அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • 2023 EICMA நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    சுசுகி நிறுவனம் அட்வென்ச்சர் பிரிவை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுசுகி நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் V ஸ்டார்ம் 800 மாடலை என்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து இணையத்தில் லீக் ஆகி இருக்கும் தகவல்களில் சுசுகி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்வதற்காக மூன்று மாடல்களை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மாடல்கள் V ஸ்டார்ம் 800DE அட்வென்ச்சர் மற்றும் V ஸ்டார்ம் 800DE மாடல்களின் 2024 வெர்ஷன் ஆகும். இந்த இரு மாடல்களும் 2022 EICMA ஆட்டோ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    தற்போது லீக் ஆகி இருக்கும் தகவல்களின் படி சுசுகி நிறுவனம் குறைந்த விலை மாடல் ஒன்றை இந்த பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய மாடல் V ஸ்டார்ம் 800 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் சிறிய முன்புற வீல், அலாய் வீல்கள், வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய குறைந்த விலை மோட்டார்சைக்கிள் 2023 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. சுசுகி நிறுவனம் தனது V ஸ்டார்ம் 800DE மாடலை இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்வதால், அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

    சுசுகி நிறுவத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று அக்சஸ் 125. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல் ஏற்கனவே பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், இதன் மற்றொரு புதிய நிற வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் கொண்ட வேரியன்டின் விலை ரூ. 85 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    புதிய நிறம் கொண்ட சுசுகி அக்சஸ் பியல் ஷைனிங் பெய்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் வைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு, சீட் மட்டும் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் டாப் என்ட் வேரியன்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

     

    சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஸ்கூட்டரில் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் 124சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேரிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் சிங்கில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் அல்லது டிரம் பிரேக் என வேரியன்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அக்சஸ் 125 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 889 என்று துவங்குகிறது. இந்த மாடல் யமஹா பசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • சுசுகி அக்சஸ் 125 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் உள்ளது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 125சிசி ஸ்கூட்டர், அக்சஸ் 125 உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 50 லட்சமாவது அக்சஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள கெர்கி டௌலா ஆலையில் இருந்து வெளியானது.

    இருசக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும், சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் அக்சஸ் 125 இருக்கிறது. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல்- ஸ்டான்டர்டு, ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

     

    இதன் டாப் என்ட் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார்போல் ப்ளூடூத் மாட்யுல் மூலம் மிஸ்டு கால் அலெர்ட்கள், போன் பேட்டரி லெவல் இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

    சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.58 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலில் ஸ்டீல் வீல்கள், டிரம் பிரேக்குகள் உள்ளன.

    இதன் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்கள், முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய இருசக்கர வாகன சந்தையின் 125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் அக்சஸ் 125 மட்டுமின்றி பர்க்மேன் ஸ்டிரீட், பர்க்மேன் ஸ்டிரீட் EX மற்றும் அவெனிஸ் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

    • புதிய ரேலி எடிஷன் மாடலில் ஏராளமான அப்கிரேடுகள் செய்யப்பட்டு, ஆஃப் ரோடர் மாடலாக வெளிப்படுகிறது.
    • புதிய வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மாடலிலும் 776சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வி ஸ்டாம் சீரிஸ் ஆகும். உள்நாடு மற்றும் பல்வேறு சர்வதேச சந்தைகளில் வி ஸ்டாம் சீரிஸ் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சுசுகி வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ரேலி எடிஷன் மாடலில் ஏராளமான அப்கிரேடுகள் செய்யப்பட்டு, ஆஃப் ரோடர் மாடலாக வெளிப்படுகிறது. டிசைன் அடிப்படையில், புதிய ரேலி எடிஷனில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், ரேலி சார்ந்த கிராஃபிக்ஸ் பைக்கிற்கு அசத்தல் தோற்றத்தை கொடுக்கிறது. இதன் கிட்-இல் ஹேன்ட்கார்டுகள், கிராஷ் கார்டுகள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

    இத்துடன் ஆஃப்ரோடு சார்ந்த ப்ரிட்ஜ்-ஸ்டோன் AX41 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை அதிக சகதி உள்ள பகுதிகளிலும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது. புதிய வி ஸ்டாம் 800DE ரேலி எடிஷன் மாடலிலும் 776சிசி பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்ட USD முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீலோடு - ரிபவுன்ட் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முந்தைய தலைமுறை வி ஸ்டாம் 650 மற்றும் வி ஸ்டாம் 1000 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருக்கிறது. புதிய வி ஸ்டாம் 800DE மாடல் இந்திய சந்தையில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இந்த பிரிவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.

    சுசுகி நிறுவன இந்திய விற்பனையாளர்கள் V-Strom 650XT மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுசுகி நிறுவனம் V-Strom 800DE மாடல் அறிமுகம் பற்றி விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய சுசுகி V-Strom 800DE மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கவில்லை.

    சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி V-Strom 800DE மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    சுசுகி V-Strom 800DE

    சுசுகி V-Strom 800DE

    இத்துடன் டு-வே குயிக்ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 21/17-இன்ச் ஸ்போக் வீல், டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர் ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஷோவா முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது இந்த பிரிவில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் சுசுகி V-Strom 800DE மாடல் பிஎம்டபிள்யூ F850GS, டிரையம்ப் டைகர் 900 ரேலி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன.
    • கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இருசக்கர வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக ஹோண்டா, யமஹா, சுசுகி மற்றும் கவாசகி விளங்குகின்றன. நான்கு நிறுவனங்களும் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நான்கு முன்னணி நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளன.

    இந்த கூட்டணி மூலம் ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளன. கூட்டணியின் அங்கமாக அரசு அனுமதி பெற்று HySE (Hydrogen small mobility & engine technology) பெயரில் ஆய்வு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

     

    ஜப்பானை சேர்ந்த நான்கு நிறுவனங்களும் ஆற்றலை உருவாக்கும் ஒரே திறன், சூரியசக்தி மட்டும் தான் என்று நம்புவதற்கு எதிராக உள்ளன. உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகவும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால், இதற்கான மாற்று நிச்சம் உள்ளது. அதற்கு ஹைட்ரஜன் தான் பதில் என்று HySE உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

    கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோண்டா நிறுவனம் ஹைட்ரஜன் சார்ந்த என்ஜின்களின் மாடல் வளர்ச்சி பிரிவில் ஆய்வு செய்கிறது. சுசுகி நிறுவனம் இதற்கான சாத்தியக்கூறு, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்கிறது.

    யமஹா நிறுவனம் ஹைட்ரஜன் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க் பிரிவில் கவனம் செலுத்துகிறது. கவாசகி நிறுவம் ரி-ஃபியூவலிங் சிஸ்டம் மற்றும் டேன்க், ஃபியூவல் டேன்க் மற்றும் இன்ஜெக்டர்களை இன்ஸ்டால் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது. டொயோட்டா நிறுவனமும் இந்த கூட்டணியில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை செய்து உதவ இருக்கிறது. 

    • சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2006 பிப்ரவரி மாத வாக்கில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது இந்திய பணிகளை துவங்கியது.

    சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பிரிவு சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வாகன உற்பத்தியில் 70 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. குருகிராமை அடுத்த கெர்கி தௌலா ஆலையில் இருந்து 70 லட்சமாவது யூனிட்டை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.

    70 லட்சமாவது யூனிட் சுசுகி வி ஸ்டார்ம் SX மாடல் ஆகும். இந்த யூனிட் மஞ்சள் நிற வேரியண்ட் ஆகும். 2006 பிப்ரவரி மாதம் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் பணிகளை துவங்கியது.

     

    "மார்ச் 2023 வரை நிறைவுற்ற நிதியாண்டில் மட்டும் நாங்கள் 9 லட்சத்து 38 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறோம். எங்களின் வருடாந்திர வளர்ச்சி 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 24.3 சதவீதம் ஆகும்," என்று சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி உமெடா தெரிவித்துள்ளார்.

    இந்திய சந்தையில் சுசுகி வி ஸ்டார்ம் SX, ஜிக்சர் SF 250, ஜிக்சர் SF, ஜிக்சர், அக்சஸ் 125, அவெனிஸ், பர்க்மேன் ஸ்டிரீட் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் EX போன்ற மாடல்களை சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் வி ஸ்டார்ம் 650XT, கட்டானா மற்றும் ஹயபுசா போன்ற மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. 

    • சுசுகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
    • இந்தியாவில் பர்க்மேன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன.

    எலெக்ட்ரிக் வாகன துறையில் சீனர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பெரும்பாலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை போன்றே, சீனாவில் இருந்து இறக்குமதி எண்ணிக்கையும் ஒரே அளவில் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் யூனிட்கள் எளிதில் ரிபிராண்டு செய்யப்பட்டு வழக்கமான ஐசி என்ஜின் வாகனங்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் மாற்று வாகனமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    ஏத்தர் மற்றும் ஒலா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் துறையில் முன்னணி இடம்பிடித்துள்ளன. இதுதவிர பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த வரிசையில், சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    சமீபத்தில் சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதுதவிர இந்த மாடலின் டிசைன் காப்புரிமை சார்ந்த விவரங்களும் வெளியாகின. இந்த வரிசையில், சுசுகி நிறுவனம் தனது பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலை ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    எனினும், இந்த ஸ்கூட்டர் பற்றிய முழு விவரங்களை சுசுகி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தோற்றத்தில் பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடல், தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் வேரியண்டில் எதிர்கால தோற்றத்திற்கு ஏற்ற பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் வைட் நிற பாடி மற்றும் புளூ ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், சிறிய வைசர் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.

    பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலின் எடை 110 கிலோ என்ற அடிப்படையில், பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலின் எடை 147 கிலோ ஆகும். எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருப்பதால் இதன் எடை அதிகரித்து இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை புதிய மாடலில் 4.0 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 18 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் வெறும் 44 கிலோமீட்டர்கள் மட்டுமே செல்லும் என்று தெரிகிறது. மேலும் இந்த ரேன்ஜ் பெற ஸ்கூட்டரை மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்திற்குள் ஓட்ட வேண்டும். இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் நிலையில், பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பர்க்மேன் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • தோற்றத்தில் இ பர்க்மேன் மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனம்- பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது. தற்போது சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இ பர்க்மேன் மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய இ பர்க்மேன் மாடல் தோற்றத்தில் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.

    மேக்சி ஸ்டைல் பாடிவொர்க் கொண்ட முன்புறத்தில் பிரமாண்ட பக்கவாட்டு பேனல்கள் உள்ளன. ஹார்டுவேரை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், முன்புறம் டிஸ்க் பிரேக் செட்டப் உள்ளது. இந்த மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி வழங்கப்படுவதால் டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்படலாம்.

    சுசுகி இ பர்க்மேன் மாடலில் 4.0 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் கழற்றி மாற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது 44 கிலோமீட்டர் ரேஞ்ச், மணிக்கு அதிகபட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கென சார்ஜிங் மையங்களை அமைக்க ஹோண்டா நிறுவனம் கச்சோ உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இ பர்க்மேன் மாடல் மொத்தத்தில் 147 கிலோ எடை கொண்டிருக்கும் என்றும் இதன் உயரம் 780mm வரை இருக்கும் என்றும் தெரிகிறது. 

    • சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டர் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புதிய ஸ்கூட்டர்கள் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டுள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிய E20 விதிகளுக்கு பொருந்தும் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில், புதிய ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும். சுசுகி நிறுவனத்தின் அக்சஸ் 125, அவெனிஸ் மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் மாடல்கள் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

     

    புதிய ஸ்கூட்டர் மாடல்கள் OBD2-A விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் மேம்பட்ட ஆன்-போர்டு டயக்னாஸ்டிக்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகனங்களை புதிய E20 மற்றும் OBD2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து வருகின்றன. இதில் யமஹா மோட்டாரைச்கிள் இந்தியா, மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார் மற்றும் ரெனால்ட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    சுசுகியின் ஸ்கூட்டர் மாடல்களில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    சுசுகி அக்சஸ் பேஸ் வேரியண்ட் ரூ. 79 ஆயிரத்து 400

    சுசுகி அக்சஸ் டாப் வேரியண்ட் ரூ. 89 ஆயிரத்து 500

    பர்க்மேன் ஸ்டிரீட் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ரூ. 93 ஆயிரம்

    பர்க்மேன் ஸ்டிரீட் ரைடு கனெக்ட் எடிஷன் ரூ. 97 ஆயிரம்

    அவெனிஸ் ஸ்டாண்டர்டு எடிஷன் ரூ. 92 ஆயிரம்

    அவெனிஸ் ரேஸ் எடிஷன் ரூ. 92 ஆயிரத்து 300

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • 2023 ஜிக்சர் மாடல்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மேம்பட்ட ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்கள் ஆகும். இவை நேக்கட் மற்றும் ஃபேர்டு என இருவித டிசைனிங்கில் கிடைக்கின்றன. 2023 ஜிக்சர் சீரிஸ் புதிய நிறங்களில் அறிமுகமாகி இருக்கின்றன. ஜிக்சர் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மிட்-லைஃப் அப்டேட் மூலம் அதன் விற்பனை மற்றும் ஆயுளை நீட்டிக்க சுசுகி திட்டமிட்டுள்ளது.

    டாப் எண்ட் மாடலான 2023 சுசுகி ஜிக்சர் SF 250 தற்போது மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No. 2 மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடான் புளூ நிறங்களில் கிடைக்கிறது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் No.2 நிறங்களில் கிடைக்கிறது. சிறிய 155சிசி ஜிக்சர் மாடல் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் பூளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய நிறங்கள் மட்டுமின்றி 2023 மாடல்களில் சுசுகி நிறுவனம் சுசுகி ரைட் கனெக்ட் வசதியை வழங்கி இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் அலர்ட், மிஸல்டு கால் நோட்டிஃபிகேஷன், ஓவர்ஸ்பீடிங் அலர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஸ்மார்ட்போன் செயலியை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    காஸ்மெடிக் மற்றும் கனெக்டிவிட்டி தவிர புதிய ஜிக்சர் சீரிசில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் சுசுகி ஜிக்சர் 250சிசி மாடலில் 249சிசி, சிங்கில் சிலண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.13 ஹெச்பி பவர், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 155சிசி மாடலில் சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 13.41 ஹெச்பி பவர், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    விலை விவரங்கள்:

    2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் சோனிக் சில்வர், மெட்டாலிக் ட்ரிடான் புளூ - ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 500

    2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 - ரூ. 2 லட்சத்து 02 ஆயிரம்

    2023 நேக்கட் ஜிக்சர் 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம்

    2023 சுசுகி ஜிக்சர் SF - ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 500

    2022 சுசுகி ஜிக்சர் நேக்கட் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் புளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 500

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×