search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்தியாவில் ஜிக்சர் சீரிசை அப்டேட் செய்த சுசுகி - புதிய மாடல் விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் ஜிக்சர் சீரிசை அப்டேட் செய்த சுசுகி - புதிய மாடல் விலை எவ்வளவு தெரியுமா?

    • சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • 2023 ஜிக்சர் மாடல்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மேம்பட்ட ஜிக்சர் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜிக்சர் சீரிஸ் 155சிசி மற்றும் 250சிசி மாடல்கள் ஆகும். இவை நேக்கட் மற்றும் ஃபேர்டு என இருவித டிசைனிங்கில் கிடைக்கின்றன. 2023 ஜிக்சர் சீரிஸ் புதிய நிறங்களில் அறிமுகமாகி இருக்கின்றன. ஜிக்சர் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மிட்-லைஃப் அப்டேட் மூலம் அதன் விற்பனை மற்றும் ஆயுளை நீட்டிக்க சுசுகி திட்டமிட்டுள்ளது.

    டாப் எண்ட் மாடலான 2023 சுசுகி ஜிக்சர் SF 250 தற்போது மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No. 2 மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் ட்ரிடான் புளூ நிறங்களில் கிடைக்கிறது. நேக்கட் ஸ்டிரீட்ஃபைட்டர் மாடல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் No.2 நிறங்களில் கிடைக்கிறது. சிறிய 155சிசி ஜிக்சர் மாடல் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் பூளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய நிறங்கள் மட்டுமின்றி 2023 மாடல்களில் சுசுகி நிறுவனம் சுசுகி ரைட் கனெக்ட் வசதியை வழங்கி இருக்கிறது. இது மோட்டார்சைக்கிள்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இத்துடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் அலர்ட், மிஸல்டு கால் நோட்டிஃபிகேஷன், ஓவர்ஸ்பீடிங் அலர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஸ்மார்ட்போன் செயலியை ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    காஸ்மெடிக் மற்றும் கனெக்டிவிட்டி தவிர புதிய ஜிக்சர் சீரிசில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் சுசுகி ஜிக்சர் 250சிசி மாடலில் 249சிசி, சிங்கில் சிலண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.13 ஹெச்பி பவர், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 155சிசி மாடலில் சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 13.41 ஹெச்பி பவர், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    விலை விவரங்கள்:

    2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் சோனிக் சில்வர், மெட்டாலிக் ட்ரிடான் புளூ - ரூ. 2 லட்சத்து 02 ஆயிரத்து 500

    2023 சுசுகி ஜிக்சர் SF 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 - ரூ. 2 லட்சத்து 02 ஆயிரம்

    2023 நேக்கட் ஜிக்சர் 250 மெட்டாலிக் மேட் ஸ்டெல்லார் புளூ, மெட்டாலிக் மேட் பிளாக் No.2 ரூ. 1 லட்சத்து 95 ஆயிரம்

    2023 சுசுகி ஜிக்சர் SF - ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 500

    2022 சுசுகி ஜிக்சர் நேக்கட் மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் பிளேஸ் ஆரஞ்சு, மெட்டாலிக் ட்ரிடான் புளூ மற்றும் கிளாஸ் ஸ்பார்கில் பிளாக் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரத்து 500

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×