search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி
    X

    பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த சுசுகி

    • சுசுகி நிறுவனத்தின் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் பிரீமியம் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது பர்க்மேன் ஸ்டிரீட் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் முற்றிலும் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும்.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சுசுகி இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் EX மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.

    சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் சுசுகியின் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். புதிய ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மிக முக்கிய மெக்கானிக்கல் அப்டேட் பெற்று இருக்கிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் மேம்பட்ட 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டை மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்டர் சிஸ்டம் உள்ளது. இது போக்குவரத்து நெரிசலில் என்ஜின் ஆஃப் ஆன பின், திராட்டிலை மெதுவாக திருகும் போது என்ஜின் ஆன் ஆகி விடும். இத்துடன் புது மாடலில் 12 இன்ச் வீல், சற்றே அகலமான 100/80 செக்‌ஷன் டயர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சுசுகி ரைடு கனெக்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் மூலம் பயனர்கள் தங்களின் போன்களை ஸ்கூட்டருடன் இணைத்துக் கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் அழைப்புகள், எல்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட் என ஏராளமான விவரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் பார்க்க முடியும்.

    Next Story
    ×