என் மலர்
பைக்

ஸ்பெஷல் எடிஷன் ஹயபுசா மாடலை இறக்கிய சுசுகி... என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹயபுசா பிரைட் புளூ மற்றும் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
- பைக்கின் சீட் கௌல் புதிதாக இருப்பதோடு, பைக்கின் நிறத்தோடு பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
சுசுகி நிறுவனம் தனது பிரபல மோட்டார்சைக்கிளான ஹயபுசாவின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் சில சர்வதேச சந்தைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹயபுசா பிரைட் புளூ மற்றும் வைட் நிறம் கொண்டிருக்கிறது. பெட்ரோல் டேங்கில் மாற்றப்பட்ட சுசுகி எழுத்துக்களுடன் புதிய லோகோ வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சீட் கௌல் புதிதாக இருப்பதோடு, பைக்கின் நிறத்தோடு பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது.
செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த பைக்கிலும் 188bhp பவர் மற்றும் 149Nm டார்க் வெளிப்படுத்தும் 1340cc 4-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரைடு மோட்கள், பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஹில் ஹோல்ட் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற உயர்-ரக எலெக்ட்ரானிக்ஸ் கொண்டுள்ளது.
இந்த மாடல் இந்தியாவிற்கு வருமா என்பதை சுசுகி இந்தியா வெளியிடவில்லை. ஆனால் சுசுகிக்கு மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இங்கு ஒரு சில யூனிட்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.






