என் மலர்
பைக்

பைக் விலையை திடீரென உயர்த்திய கேடிஎம்
- கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது.
- இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் விற்கப்படும் தனது பைக்குகளின் விலையை கேடிஎம் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த விலை மாற்றங்கள் மூலம், பைக்குகளின் விலை ரூ.12,000 வரை அதிகமாகிறது. மாடல்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் அதிகரித்து வருவதாலும், பணவீக்கம் காரணமாக ஏற்படும் வேறுபாட்டை சரிசெய்யவும், தங்கள் மாடல்களின் விலையை உயர்த்திய பிற நிறுவனங்களுடன் கேஎடிஎம் இணைந்து உள்ளது.
ஆஸ்திரிய பிராண்டின் விலை உயர்வில் கேடிஎம் 390 டியூக் மாடல் விலை குறைந்தபட்சமாக ரூ.1,000 அதிகரித்துள்ளது. இதன் மூலம் பைக்கின் விலை ரூ.2.96 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) மாறியுள்ளது. முன்னதாக, இந்த நிறுவனம் பைக்கின் விலையை ரூ.18,000 குறைத்திருந்தது. இதனால் பைக்கின் விலை ரூ.3.13 லட்சத்திலிருந்து ரூ.2.95 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) குறைந்தது.
இதற்கிடையில், கேடிஎம் 250 டியூக் மற்றும் RC 390 இப்போது ரூ.5,000 விலை உயர்ந்துள்ளன. இதன் மூலம் 250 டியூக்கின் விலை ரூ.2.30 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் RC 390 இப்போது ரூ.3.23 லட்சமாக (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்) உள்ளது. பஜாஜ் பல்சர் N250, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R மற்றும் சுசுகி ஜிக்ஸர் 250 போன்ற இந்திய சந்தையில் பிராண்டின் பிரபலமான மாடல்களில் 250 டியூக் ஒன்றாகும்.
கேடிஎம் RC 200 அதிகபட்சமாக ரூ.12,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்துடன், பைக் இப்போது ரூ.2.33 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும், முந்தைய ரூ.2.21 லட்சத்துடன் ஒப்பிடும்போது இந்த பைக் ஹீரோ கரிஸ்மா எக்ஸ்.எம்.ஆர்., பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200, சுசுகி எஸ்.எஃப். 250, மற்றும் யமஹா ஆர்15 வி4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






