என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிஎம்டபிள்யூ"
- விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. எலெக்ட்ரிக் 2-வீலர் 3.92 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 4.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
இதுதவிர, பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஆல்-எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இது ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. CE 04 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் பி.எம்.டபிள்யூ. CE 02 மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 11 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.92 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 11/15 கிலோவாட்/ஹெச்பி பவர் மற்றும் 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
- புதிய பிஎம்டபிள்யூ கார் மொத்தத்தில் 500 யூனிட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி-இன் புது வெர்ஷனை அறிமுகம் செய்தது. புது வெர்ஷன் XM லேபெல் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 3 கோடியே 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎம்டபிள்யூ XM ஸ்டாண்டர்டு வெர்ஷன் விலையை விட ரூ. 55 லட்சம் அதிகம் ஆகும்.
புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் எடிஷன் மாடல் உலகளவில் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் இந்தியாவில் ஒரே யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய காரின் கிட்னி கிரில், விண்டோ லைன், அலாய் வீல்கள், ரியர் டிஃப்யூசர்-ஐ சுற்றி சிவப்பு நிற ஹைலைட் செய்யப்பட்டு உள்ளது.
வெளிப்புறம் பிஎம்டபிள்யூ இன்டிவிடியூவல் ஃபுரொஸென் கார்பன் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. உள்புறத்தில் 14.9 இன்ச் அளவில் கர்வ்டு டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், அடாப்டிவ் M சஸ்பென்ஷன்கள், பொயெர்ஸ் அன்ட் வின்கின்ஸ் 20-ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இதுவவரை பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல் என்ற பெருமையை புதிய பிஎம்டபிள்யூ XM லேபெல் பெற்றிருக்கிறது. இந்த காரில் 4.4 லிட்டர் வி8 டுவின் டர்போ ஹைப்ரிட் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 748 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் புது அப்டேட் தவிர வேறு மாற்றங்கள் இல்லை.
- இந்த பைக்கிலும் 312சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது G 310 RR மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் தற்போது காஸ்மிக் பிளாக் 2, வைட் மற்றும் M ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் ரேசிங் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதனை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம். எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்கிட முடியும். ரேசிங் புளூ மெட்டாலிக் நிற வேரியண்ட் ரெட், வைட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.
புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கிலும் 312சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் G 310 GS மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மற்றும் RTR 310 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவற்றின் டியூனிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ மாடலில் இந்த எஞ்சின் 34 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கியது.
- இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வந்தது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி இருக்கிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மட்டும் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல ரைடிங் மோட்கள், 10.25 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 8.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ CE 04 முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டருடன் ஸ்டான்டர்டு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷன்களை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. ஸ்டான்டர்டு சார்ஜர் 4 மணி நேரத்திலும், பாஸ்ட் சார்ஜர் 1 மணி 40 நிமிடங்களிலும் பேட்டரியை சார்ஜ் ஏற்றிவிடும்.
தற்போதைக்கு இந்த ஸ்கூட்டர் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது இம்பீரியல் புளூ மற்றும் லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.
- 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
- எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை மாடலான பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் ஆரம்ப விலை ரூ.72.90 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வகைகளில், இரண்டு வண்ணங்கள் மற்றும் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இது உலகளவில் வெற்றிபெற்ற நடுத்தர அளவிலான செடானின் 8-வது தலைமுறையாகும்.
வெளிப்புற தோற்றம்:
புதிய 5 சீரிஸ் சமீபத்திய பிஎம்டபிள்யூ-வின் சிக்னேச்சர் கிட்னி கிரில்லை நேர்த்தியான முழு எல்இடி ஹெட்லேம்ப்களுடன் பெறுகிறது. பிஎம்டபிள்யூ 18 இன்ச் மற்றும் 19 இன்ச் வீல்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கூடுதல் நீளமாக உள்ளதை பார்க்க முடியுகிறது.
பின்புறம் முந்தைய தலைமுறையின் வட்டத்தன்மையை இழந்து, உறுதியான பம்பர் மற்றும் சிக்னேச்சர் ரேப்-அரவுண்ட் எல்இடி டெயில் லேம்ப்களுடன் கூர்மையான தோற்றத்தில் காணப்படுகிறது.
உட்புறம் மற்றும் சிறப்பம்சங்கள்
பிஎம்டபிள்யூ கேபின் வடிவமைப்பு, கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒற்றை திரை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சென்டர் கன்சோல் பெரியதாகவும் மற்றும் ஸ்க்ரோல் வீல் மற்றும் கியர் செலக்டர் மெக்கானிசம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சீட் வரிசை மிகவும் விசாலமாகவும் அனைத்து வயதினருக்கும் தேவைப்படும் அனைத்து வசதிகளும் உள்ளன.
இத்துடன் பனோரமிக் சன்ரூஃப், போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், இன்டீரியர் கேமரா, லெதரெட் இருக்கை மேற்கவர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் ஃபோன் மிரரிங், கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா மற்றும் தானியங்கி பார்க்கிங் உள்ளிட்ட டிரைவர் உதவி அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
பவர்டிரெய்ன் விருப்பங்கள்
புதிய 5 சீரிஸ் ஒரு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது. இது 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் மோட்டார் 256bhp/400Nm வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் பின்புற சக்கரங்களை இயக்கும் எட்டு வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த எஞ்சினுடன் 48V மைல்ட் ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடும். இந்த புதிய தலைமுறையில் 5 சீரிஸ், வரவிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் E-Class மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
- பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார்.
- இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு கடுமையான குறைபாடுகள் இருந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரை தனக்கு விற்றதாக பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய காரை வாங்க வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். தனக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். பழைய காருக்கு பதில் புதிய காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவும் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
- பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அந்த பெண் மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாயமானார். இந்த காரை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டி வந்ததும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
மதுபோதையில் கார் ஓட்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவாகி இருக்கிறார். மிஹிர் ஷாவை அவரது காதலி மறைத்து வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், விபத்து நடைபெறும் முன் மிஹிர் ஷா பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
வீடியோவின் படி மிஹிர் ஷா பாரில் இருந்து வெளியே வந்து நண்பர்களுடன் மெர்சிடிஸ் காரில் கிளம்பி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்திற்கு பிறகு மிஹிர் ஷா காரை மாற்றிக் கொண்டு பிஎம்டபிள்யூ காரை மதுபோதையில் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிஹிர் ஷா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது தந்தையும் அரசியல் தலைவருமான ராஜேஷ் ஷா மற்றும் வழக்கில் தொடர்புடைய பிஎம்டபிள்யூ காரின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மிஹிர் ஷா தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் பார் ஒன்றில் இருந்து வெளியே வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
- ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே தனது மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தனது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் பிஎம்டபிள்யூ CE 04 மாடல் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி திறன் 8.9 கிலோ மெகாவாட் ஆகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இதன் மோட்டார் 31kW திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில் 0-50 கி.மீட்டரும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லும். இந்த ஸ்கூட்டரை ஸ்டான்டர்டு சார்ஜர் மூலம் 4 மணி நேரம் 20 நிமிடங்களிலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 1 மணி நேரம் 40 நிமிடங்களிலும் சார்ஜ் ஏற்றலாம்.
பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன் மற்றும் பின்புறம் 15 அங்குல சக்கரங்களை கொண்டிருக்க்கிறது. இந்த ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 780mm அளவில் உள்ளது. இதன் எடை 179 கிலோ ஆகும். இந்த ஸ்கூட்டரில் ஏபிஎஸ், புளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT டிஸ்ப்ளே மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பானது எதிர்காலத்திற்கு ஏற்றதாகவும், அதிக வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, C 400 GT விலையானது ரூ.11.20 லட்சம் எக்ஸ் ஷோரூமில் இந்தியாவில் விற்பனையானது. இதன்அடிப்படையில் பார்த்தால் பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது.
- 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜெர்மனியை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று பிஎம்டபிள்யூ (BMW). பல்வேறு நாடுகளில் கார்களை விற்பனை செய்யும் BMW நிறுவனத்துக்கு முக்கியமான மார்க்கெட்டாக இந்தியா திகழ்கிறது. இதனாலேயே இங்கு அவ்வப்போது புதுப்புது கார்களை அறிமுகப்படுத்துகிறது BMW நிறுவனம்.
அந்த வகையில், தற்போது BMW நிறுவனத்தின் 8-வது தலைமுறை 5 சீரிஸ் லாங்க் வீல்பேஸ் (BMW 5 Series Long Wheelbase) மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. வருகிற 24-ந்தேதி தான் இந்த மாடலை அறிமுகம் படுத்தப்படுகிறது. இதற்கு முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள BMW டீலர்கள் அல்லது ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலானது, லாங் வீல்பேஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. 5 சீரிஸ் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் முன்பு இருந்ததை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என இருவிதமாக இந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது.
- முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1300 GS பிளாக்ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் பைக்கின் விலை ரூ. 20 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய R 1300 GS மாடல் புதிய நிறங்கள் மற்றும் புதிதாக கூடுதல் உபகரணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிஎம்டபிள்யூ R 1300 GS மாடல் லைட் வைட், GS டிராபி, ஆப்ஷன் GS டிரமான்டுனா மற்றும் டிரிபில் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இவைதவிர இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன், எஞ்சின் மற்றும் பெரும்பாலான அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் முற்றிலும் புதிய 1300சிசி, லிக்விட் கூல்டு, பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள எஞ்சின் 145 ஹெச்.பி. பவர், 149 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ R 1300 GS மாடலில் டிஎப்டி ஸ்கிரீன், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற வசதி கொண்டிருக்கிறது.
இத்துடன்- இகோ, ரெயின், ரோட், என்டியூரோ போன்ற ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பிரேக் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரெஷர் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
- அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது முற்றிலும் புதிய கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. R20 என அழைக்கப்படும் புதிய பைக் Concorso d'Eleganza Villa d'Este நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் 2000சிசி ஏர்-ஆயில்-கூல்டு பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த பைக் அதிநவீன கிளாசிக் மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது.
இந்த மாடலில் அலுமினியம் ஃபியூவல் டேன்க் "ஹாட்டர் தன் பின்க்" நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன் பாலிஷ் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் அதிநவீன எல்.இ.டி. ஹெட்லைட், 3D முறையில் அச்சிடப்பட்ட அலுமினியம் ரிங் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் முன்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல், பின்புறம் 17 இன்ச் பிளாக் டிஸ்க் வீல் வழங்கப்படுகிறது.
சஸ்பென்ஷனுக்கு இருபுறமும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆலின்ஸ் பிளாக்லைன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
- இந்த பைக்கிற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
- டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சமீபத்தில் M 1000 XR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்த நிலையில், தற்போது S 1000 XR மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய பி.எம்.டபிள்யூ. S 1000 XR மோட்டார்சைக்கிள் விலை ரூ. 22.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தைக்கு முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட வடிவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலின் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக், கிராவிட்டி புளூ மெட்டாலிக் நிறங்களிலும், வைட் சாலிட் பெயின்ட் / மோட்டார்ஸ்போர்ட் (M பேக்கேஜ் உடன்) நிறங்களிலும் கிடைக்கிறது. இந்த பைக் உடன் டூரிங் மற்றும் டைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
இதன் ஸ்டான்டர்டு வெர்ஷனில் ரைடர் மோட் ப்ரோ, ஹீட்டெட் க்ரிப், ஹெட்லைட் ப்ரோ மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட், குரூயிஸ் கண்ட்ரோல், கீலெஸ் ரைட், யு.எஸ்.பி. சார்ஜர் மற்றும் டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த மோட்டார்சைக்கிள் M பேக்கேஜ் உடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதில் பிரத்யேக நிற ஆப்ஷன், M ஸ்போர்ட் சீட், M லைட் வெயிட் பேட்டரி, M ஃபோர்ஜ் செய்யப்பட்ட வீல்கள், M என்டூரன்ஸ் செயின், M GPS லேப்ட்ரிகர், ஸ்போர்ட்ஸ் சைலன்சர், டின்ட் செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ் விண்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. S 1000 XR மாடலில் 999 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 168 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்படுகிறது.
இந்த பைக் - ரெயின், ரோட், டைனமிக் மற்றும் டைனமிக் ப்ரோ என நான்குவித ரைடிங் மோட்களில் கிடைக்கிறது. இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்