என் மலர்
நீங்கள் தேடியது "bmw car"
- ரேஞ்ச் அல்லது சார்ஜிங் கிடைக்கும் தன்மை குறித்து எந்த கவலையும் இல்லாமல் சீரான மின்சார இயக்கத்தை உறுதி செய்கிறது.
- ஒவ்வொரு 300 கிலோமீட்டருக்கும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 5,000 மின்சார வாகனங்களை விநியோகம் செய்த முதல் சொகுசு கார் தயாரிப்பாளராக மாறியுள்ளது. இது அதன் மின்-இயக்கப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த சாதனையை நினைவுகூரும் வகையில், வடக்கிலிருந்து தென்னிந்தியா வரை 4,000 கிமீ நீளமுள்ள பாதையில் உயர் சக்தி சார்ஜிங் பாதையை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது, பிஎம்டபிள்யூ இந்தியா முன்னணி பொது சார்ஜிங் நெட்வொர்க்குகளுடன் கூட்டணி அமைத்து நாடு முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை பயன்படுத்த வழி செய்கிறது. கூடுதல் வசதிக்காக இந்த சார்ஜிங் மையங்கள் அனைத்தையும் myBMW செயலி மூலம் கண்டுபிடித்து அணுக முடியும்.
இந்த வழித்தடம் 4,000 கிலோமீட்டர் நீளத்தை உள்ளடக்கியது. இதில் ஒவ்வொரு 300 கிலோமீட்டருக்கும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரேஞ்ச் அல்லது சார்ஜிங் கிடைக்கும் தன்மை குறித்து எந்த கவலையும் இல்லாமல் சீரான மின்சார இயக்கத்தை உறுதி செய்கிறது.
இந்த பாதை மூலோபாய ரீதியாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர்- அகமதாபாத்- மும்பை- புனே-ஹுப்ளி-பெங்களூரு-கோயம்புத்தூர்-மதுரை போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கியுள்ளது. மின்-இயக்கத்தை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதையும் வசதியையும் ஊக்குவிக்க, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா நாட்டில் உள்ள அனைத்து எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகளின் வாடிக்கையாளர்களுக்கும் அணுகலைத் திறந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பிஎம்டபிள்யூ நிறுவனம், ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணியில் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த ஆதிக்கம் தொடர்ந்தது ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,322 பிஎம்டபிள்யூ மற்றும் மினி மின்சார வாகனங்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 234 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மொத்த விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இப்போது 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடலாக பிஎம்டபிள்யூ iX1 லாங் வீல்பேஸ் உருவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ i7 இரண்டாவது இடத்தில் உள்ளது.
- 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
- 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதியதாக 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு காரை அறிமுகம் செய்துள்ளது. இருவிதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த காரில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த யூனிட் அதிகபட்சமாக 156 ஹெச்.பி. பவர் மற்றும் 230 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த எஞ்சினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
கிட்னி வடிவ கிரில் அமைப்பு, 10.7 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, கேபின் கேமரா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த கார் ரூ.46.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
- வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சாலை ஒன்றில் கருப்பு நிறத்தில் பிஎம்டபுள்யூ சொகுசு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, அந்த கார் அருகே மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர் ஆயுதத்தை கொண்டு கார் ஜன்னலை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
இரு சக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த அவனது கூட்டாளியாக மற்றொரு நபருடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. பணத்தை தொலைத்தவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது.
- மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசும், பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர் தலா அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு மாநில கிரிக்கெட் சங்கம் வெகுமதிகளை அறிவித்தது. பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு ரூ. 10 லட்சமும், சிறந்து விளங்குபவர்களுக்கு ரூ. 50,000 பரிசும் வழங்குவதாக உறுதியளித்தது. இதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை வென்றால், ஒவ்வொரு வீரருக்கும் BMW கார் வழங்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜெகன் மோகன் ராவ் அர்சினப்பள்ளி உறுதியளித்துள்ளார்.
மேலும் ஒட்டுமொத்த அணிக்கும் 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணி 1937-38 மற்றும் 1986-87 பதிப்புகளில் ரஞ்சி கோப்பையை வென்றது. ஆனால் கடந்த பதிப்பில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்த ஐதராபாத் அணி ஏழு லீக் ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தபோது பிளேட் பிரிவுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது.
- இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.
இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பி.எம்.டபுள்யூ. கொரியாவின் அதிகாரி கூறியதாவது:-
போக்குவரத்து அமைச்சகம் தங்கள் நிறுவனம் மீது நேரடியாக குற்றம் சாட்டவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். #BMW
திருப்பூரை சேர்ந்தவர் விக்னேஷ் ராஜா. பனியன் நிறுவன உரிமையாளர்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது சொகுசு காரில் சென்றார்.
முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் வரும்போது, பாம்பு ஒன்று காரின் முன்பக்க கண்ணாடியில் படம் எடுத்து ஆடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது பாம்பை காணவில்லை.
எனினும் கார் உரிமையாளருக்கு சந்தேகம் இருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள கார் நிறுவனத்துக்கு தகவல் கூறி நிறுவனத்தின் பணிமனைக்கு காரை கொண்டு சென்று பார்த்தபோது, காரின் என்ஜின் பகுதியில் 5 அடி நீள நாக பாம்பு சுருண்டு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பாம்பு பிடிக்கும் வீரரான சஞ்சய் அழைக்கப்பட்டார். அவர் காரில் சுருண்டு படுத்து இருந்த பாம்பை 1 மணி நேரம் போராடி லாவகமாக பிடித்து வெளியில் எடுத்தார். பின் அந்த பாம்பானது பத்திரமாக மதுக்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
உயர் ரக சொகுசு காரில் 5 அடி நீள நாகப்பாம்பு பதுங்கி இருந்தது கார் உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Snake #Car






