BMW காரில் வந்து பூந்தொட்டியை திருடி செல்லும் பெண் - வீடியோ வைரல்

இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
BMW காரில் வந்து பூந்தொட்டியை திருடி செல்லும் பெண் - வீடியோ வைரல்
Published on

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு கடைக்கு வெளியே வைத்திருந்த பூந்தொட்டியை பி.எம்.டபிள்யூ. காரில் வந்த பெண் ஒருவர் திருடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பி.எம்.டபிள்யூ. காரில் இருந்து வெளியே வரும் பெண் ஒருவர் கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டியை திருடி காருக்குள் வைக்கிறார். இதனை பார்த்த சிலர் அப்பெண்ணின் காரை வழிமறித்து இதுகுறித்து கேட்டபோது தினமும் ஒரு பூந்தொட்டியை எடுத்து செல்வேன் என்று அவள் கூறியுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே அக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இரண்டு பூந்தொட்டிகளை திருடிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் அக்டோபர் 25ம் தேதி நள்ளிரவில் நடந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசாரிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com