என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incense Sticks"

    • போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
    • வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் நவி பார்டி கிராமத்தில் உள்ள தேசிய தொழிற்பேட்டையில் உள்ள குடோன் மற்றும் கலுடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.

    குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், ஈனோ பிராண்டை பிரதிபலிக்கும் இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களை பயன்படுத்தி போலி ஈனோ சோடாவை அவர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தது சோதனையில் தெரியவந்தது.

    குடோனில் ஈனோ பிராண்ட் சோடாவை பேக் செய்யும்போது இரண்டு பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பினால் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்திய போலீசார், போலி ஈனோ சோடா, மங்கல் தீப் தூபக்குச்சிகள் மற்றும் வீட் முடி அகற்றும் கிரீம்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகன இருவரை போலீசார் கைது செய்தனர்.

    போலி ஈனோ மற்றும் தூபக்குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 15-20 நாட்களாக போலி தயாரிப்புகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    அங்கீகரிக்கப்பட்ட நிறுவன அதிகாரியின் புகாரின் அடிப்படையில், வினியோக தொடர்பு மற்றும் போலி தயாரிப்பு பொருட்களின் விற்பனை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
    வீடுகளில் பெரும்பாலானவர்கள் ஊதுபத்தி பயன்படுத்துகிறார்கள். வீடு முழுவதும் நறுமணம் கமழ செய்யும் ஊதுபத்தியில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களும் கலந்திருக்கின்றன. அதிலும் ஒருசில ஊதுபத்தி வகைகளில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளால் உடல் உறுப்புகள் கடும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.

    சீன பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, கொசுவர்த்தி சுருளில் இருந்து வெளியாகும் புகையைவிட அதிக ஆபத்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தியில் இருந்து வெளியாகும் புகை, காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து பயன்படுத்தும்போது நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் உருவாகக்கூடும்.



    இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு நேரும். தொடர்ந்து ஊதுபத்தி உபயோகிக்கும்போது இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து வெளியாகும் புகை ரத்த ஓட்டத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊதுபத்தி வாசத்தை குழந்தைகள் நுகர்வதும் ஆபத்தானது. கர்ப்பிணி பெண்கள் நுகரும்போது கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஊதுபத்தியில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருசிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும்.

    ஊதுபத்தி பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்னும் பட்சத்தில் குறைந்த நேரம் மட்டுமே உபயோகிப்பது நல்லது. நுரையீரல் பாதிப்புக்கு ஆளானவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
    ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கிய புத்தம் புது பி.எம்.டபிள்யூ கார் ஊதுபத்தி கொளுத்தியதால் எரிந்து எலும்புக்கூடான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்சோய் நகரத்தை சேர்ந்த நபர் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளார். புதிதாக கார் வாங்கியுள்ளதால் மத சம்பிரதாயப்படி காரின் முன்னால் ஊதுபத்தி கொளுத்தி வழிபட முடிவு செய்து காரின் முன் ஊதுபத்தியை வைத்துள்ளார்.

    சீனா உள்ளிட்ட புத்த வழிபாடு உள்ள சில நாடுகளில் ஊதுபத்திகள் பெரிதான ஒன்றாக இருக்கும். காரின் முன் ஊதுபத்தியை வைத்துவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அங்குள்ள நான்கு சிறுவர்கள் ஊதுபத்தியை கொளுத்தியுள்ளனர். திடீரென அணல் கங்குகள் காரின் மீது விழ, யாரும் எதிர்பாராத வகையில் கார் தீப்பிடிக்க தொடங்கியது.

    என்ன நடக்கிறது என அனைவரும் உணர்வதற்கு உள்ளாகவே கார் நன்றாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பலரும் கிண்டலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை கீழே காணலாம், 

    ×