என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Noida"
- பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது
- சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தெருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
இந்திய தலைநகர் புது டெல்லியின் நோய்டா (Noida) பகுதியில் உள்ள நிதாரி (Nithari) கிராம பகுதியில், கடந்த 2006 டிசம்பர் மாதம், ஒரு வீட்டின் வெளியே உள்ள வடிகால் பாதையில் பல எலும்பு கூடுகளை பொதுமக்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த புகாரை அளித்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
அந்த வீட்டை காவல்துறையினர் மேலும் ஆய்வு செய்யததில் பல குழந்தைகளின் உடல் பாகங்கள் கிடைத்தன. அந்த பகுதியின் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த பல சிறுவர் சிறுமியர் உடல்கள் அவை என்றும் தெரிய வந்தது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு துறையிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டின் வேலைக்காரன் சுரிந்தர் கோலி (Surinder Koli) மற்றும் மொனிந்த சிங் பந்தெர் (Moninder Singh Pandher) ஆகியோர் அந்த குழந்தைகளை கடத்தி, தகாத உறவில் ஈடுபட்டு, அவர்களை கொன்றதாக சிபிஐயின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது.
ஆதாரத்தை மறைக்க அக்குழந்தைகளின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியதாக கோலி தெரிவித்தான். குற்றத்தை ஒப்பு கொண்ட கோலி, உயிரிழந்தவர்களின் உடல்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அவர்களின் உடல் பாகங்களை உண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதியாக அவர்கள் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நாட்டையே உலுக்கிய 17 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குற்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம், போதுமான ஆதாரம் இல்லாததால், அவர்கள் இருவரையும் அனைத்து வழக்கிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
- இவர்கள் டெல்லியில் வசிக்க, இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார்
- பங்களாவின் சரக்கு அறையில் நிதின் ஒளிந்து கொண்டிருந்தார்
புது டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர், ரேணு சின்ஹா. இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் டெல்லியின் நொய்டா பகுதியில் செக்டார் 30ல், அவர்களது சொந்த பங்களாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார். ரேணுவிற்கு ஒரு சகோதரன் இருக்கிறார்.
நிதின் நாத் சின்ஹா, அவர்கள் வசித்து வரும் பங்களாவை விற்றுவிட விலை பேசியிருந்தார். அதற்கான முன்பணமும் வாங்கியிருந்தார். ஆனால், இந்த விற்பனையில் ரேணுவிற்கு சம்மதமில்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இது விஷயமாக இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியது. அப்போது ஆத்திரத்தில் நிதின் நாத் சின்ஹா, ரேணுவை கொலை செய்தார். அவரது உடலை குளியலறையில் போட்டு விட்டு, காவல்துறைக்கு பயந்து, அந்த பங்களாவிலேயே உள்ள ஒரு சரக்குகளை வைக்கும் அறையில் ஒளிந்து கொண்டார்.
இரு தினங்களாக தனது சகோதரியை தொடர்பு கொண்ட முயற்சிக்கும் போது அவரது செல்போன் தொடர்ந்து அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் சந்தேகம் கொண்ட ரேணுவின் சகோதரன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, பங்களாவை சோதனையிட வந்த காவல்துறையினரின் தேடுதலில் ரேணுவின் உடல் குளியலறையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது கணவரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்ட போது அவரது செல்போன் சமிக்ஞை கடைசியாக பங்களாவில் இருந்தே வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை தேடும் வேட்டையில், அவர் அந்த பங்களாவில் சரக்கு அறையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 11வது கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 6 நாட்கள் நடக்கிறது.
- டிச., 8 ந் தேதி துவங்கி,13 வரை கண்காட்சி நடக்கும்.
திருப்பூர் :
இந்தியா ஐ.டி.எம்.இ., சொசைட்டி' சார்பில் ஜவுளித்துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியா ஐ.டி.எம்.இ., கண்காட்சி- –2022 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கொரோனா காரணமாக, 2016க்கு பிறகு, 11வது கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 6 நாட்கள் நடக்கிறது. வரும் டிச., 8 ந் தேதி துவங்கி, 13 வரை நடக்கும் கண்காட்சியில், இந்தியா ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திர வர்த்தகத்தின் திருப்பு முனையாக அமையும் என தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். இது குறித்து இந்தியா ஐ.டி.எம்.இ., நிறுவன பொருளாளர் கேதன் சங்வி கூறியதாவது:-
இந்தியாவில் நடக்கும் பிரமாண்டமான கண்காட்சி 2.35 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் எழுச்சியுடன் நடக்கிறது. ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்களை காட்சிப்படுத்த, 22 பிரிவுகளாக, 1,100 ஸ்டால்கள் அமைய உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜவுளி கேந்திரமாக உள்ள இந்தியாவில் நடக்கும் கண்காட்சி, சர்வதேச அளவில் புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரான இயந்திரங்கள், ஜவுளித்துறையில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்.
கண்காட்சியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 110க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 'இந்தியா ஐ.டி.எம்.இ.,–2022' கண்காட்சி நார்ப்பொருள், ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு நடக்க உள்ளது. சர்வதேச சந்தைகளில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்களும் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில், இந்த கண்காட்சி பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமையும். சர்வதேச அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்களுக்கு இந்த கண்காட்சி யில் பங்கேற்கின்றன. திருப்பூர், கோவை ஈரோடு, சேலம், மதுரை உட்பட பல்வேறு மாவட்ட மற்றும் மாநில தொழில்துறையினர் கண்காட்சியில் பங்கேற்று வர்த்தக வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்ராவில் இருந்து பயணிகள் டபுள் டக்கர் பேருந்து நொய்டாவிற்கு இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #NoidaAccident
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கிவந்த ஒரு கால்சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அங்கு பணிபுரிந்த தொலைபேசி ஆபரேட்டர்கள் உள்பட 126 ஊழியர்களையும் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், அமெரிக்காவில் உள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு அங்கு 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணில் பிரச்சினை இருப்பதாக அவர்களிடம் தெரிவித்து, அதனை சரிசெய்வதாக கூறி பணம் பெற்றுவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 126 பேரையும் கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர்.
நொய்டாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு டஜன் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏராளமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட பல வெளிநாட்டு மக்களை இதேபோல ஏமாற்றி மோசடி செய்துவந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Noida #FakeCallCentre #USCitizen

- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
