பாலத்தில் இருந்து ஒரே ஜம்ப்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண் - மீட்பு வீடியோ வைரல்

ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்த பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்தார்தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
பாலத்தில் இருந்து ஒரே ஜம்ப்.. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண் - மீட்பு வீடியோ வைரல்
Published on

பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்று மதியம் செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் போலீசும் ஆம்புலன்சும் விரைந்தது. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com