என் மலர்
நீங்கள் தேடியது "ஆடி"
- கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
- 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆடி இந்தியா நிறுவனம், சிக்னேச்சர் வரிசையில் கியூ3, கியூ3 ஸ்போர்ட் பேக் மற்றும் கியூ5 ஆகிய லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 கார்களிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது.
இந்த என்ஜின் கியூ3, கியூ3 ஸ்போர்ட்பேக் ஆகியவற்றில் அதிகபட்சமாக 190 பி.எஸ். பவரையும், 320 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய கியூ3 மாடலில் 18 இன்ச் வி-ஸ்போக் அலாய் வீல்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கியூ5 மாடலில் 19 இன்ச் அலாய் வீல்கள், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பி யன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
- 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
- புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது.
ஆடி நிறுவனம், மூன்றாம் தலைமுறை Q3 காரை சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் புதிய Q3 மாடல் அசத்தலான அப்டேட்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
இந்த காரில், 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தம் திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 261 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மேலும், இதில் 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை குறைக்கப்படுகிறது.
- பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரி குறைப்பு 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே, வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.
- குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது.
- ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு.
வருடத்தில் எல்லா மாதமும் சிறப்பு வாய்ந்தது தான் என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று தான் அழைப்பார்கள். ஏன் என்று தெரியுமா? ஆடி என்பதே ஒரு தேவ மங்கையின் பெயர் தான். தேவ மங்கை ஒரு சாபத்தால் வேப்பமரமாக மாறி பின் அம்பிகைக்கு உகந்த விருக்ஷமாக மாறியவள். அதனால் தான் ஆடி மாதத்தையும் அம்மனையும் வேம்பையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள்.
நாளை ஆடி முதல் நாள். குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. இந்த பதிவில் ஆடி மாத முதல் நாள் வழிபாடு பற்றி பார்க்கலாம்.
ஆடி முதல் நாள் காலை எழுந்ததும் வாசல் தெளித்து மாக்கோலமிட்டு, வீடு, வாசல் துடைத்து, பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூ போட வேண்டும். பின்னர் ஒரு கலச சொம்பில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மலரால் அலங்கரித்து வைக்க வேண்டும். அதன் பின்னர் காமாட்சி அம்மன் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மனதார வணங்க வேண்டும். ஆடி மாதத்தில் மேற்கொள்ளும் விரதங்கள் முழுமையடைய வேண்டும். வேண்டிய வரங்களெல்லாம் கிடைக்க வேண்டும். எல்லா சூழ்நிலையிலும் எங்களோடு துணை நிற்க வேண்டும் தாயே ! என்றும் அந்த அம்பிகையின் அருள் வேண்டும் என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக அம்பிகைக்கு நைவேத்தியமாக வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், பாயசம் என உங்களால் முடிந்ததை படைக்கலாம். வழிபாட்டின் போது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த அம்மன் மந்திரங்களை அல்லது பாடல்களை பாடலாம். எதுவுமே தெரியவில்லை என்றாலும் குறையில்லை. அந்த அன்னையின் அருள் வேண்டி மனதார வேண்டினாலே போதும். கேட்டதை மட்டுமல்ல நம் தேவையறிந்து கேட்காததையும் அன்னை நமக்கு அருளிடுவாள்.
- புதிய ஆடி Q3 அதன் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆடி நிறுவனத்தின் புதிய Q3 எஸ்யுவி விரைவில் அறிமுகமாகிறது. வருகிற 16-ந்தேதி மூன்றாம் தலைமுறை Q3 SUV-யை வெளியிடுவதாக ஆடி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலின் புதிய வெர்ஷனாக இருக்கும். மேலும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய மாடலை விட குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த மாடல் 2018 முதல் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது. இந்த பெயர் முதலில் 2011-இல் நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து வாகன உற்பத்தியாளருக்கு நல்ல விற்பனை எண்ணிக்கையைக் கொண்டு வருகிறது. தோற்றத்தைப் பொறுத்தவரை, சமீபத்திய தலைமுறை ஆடி Q3 குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிக்சல் பாணி LED ஹெட்லேம்ப்களால் உருவாக்கப்பட்ட புதிய முன்புறம், புதிய வடிவமைப்பு கொண்ட கிரில் வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் பிராண்டின் சமீபத்திய வடிவமைப்புக்கு சார்ந்ததாக இருக்கும். இதன் டெயில் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் கூர்மையான டீடெயிலிங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆடி Q3 அதன் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி அதன் டிஜிட்டல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உட்புறத்தில் பெரிய திரைகள், MMI இன்ஃபோடெயின்மென்ட், கனெக்டிவிட்டி மற்றும் டிரைவர்-அசிஸ்ட் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆடி Q3 காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 hp பவரையும் 320 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் செயல்படுகிறது. பவர்டிரெய்ன் விருப்பங்களில் இப்போது மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது, ஆடி Q3 கார்கள் ரூ.45.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மாற்றங்கள் மூலம், இந்திய சந்தையில் இந்த எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு வரும்போது, அதன் விலை அதிகரிக்கும். கூடுதலாக, இது பிஎம்டபிள்யூ X1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA போன்ற கார்களுக்கு எதிராக தொடர்ந்து போட்டியிடும்.
- ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புது Q5 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- ஆடி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்தி 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு டெக்னாலஜி வேரியண்டை விட ரூ. 84 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கார் டாப் எண் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் கிடைக்கிறது. இந்த கார் பிளாக்டு-அவுட் லோகோ, கிளாஸ் பிளாக் முன்புற கிரில், பிளாக் ரூப், பிளாக் ORVM கேப்கள், 19 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கிராபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஐபிஸ் வைட் மற்றும் புதிய டிஸ்ட்ரிக்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இது தவிர ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 12.2 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், முன்புறம் பவர்டு இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 249 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.
ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.
2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
- இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.

"ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
- ஆடி நிறுவனத்தின் Q2 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆடி நிறுவனத்தின் Q3 மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக மாறுகிறது.
ஆடி இந்தியா நிறுவம் தனது Q2 ஆடம்பர காம்பேக்ட் எஸ்யுவி மாடலை சத்தமின்றி தனது வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் சிபியு முறையில் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட Q2 மாடல்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலக சந்தையிலும் ஆடி Q2 உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஆடி Q2 விற்பனை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. அந்த வகையில் புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்திய சந்தையில் ஆடி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி-ஆக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஆடி Q2 மாடல் நிறுத்தப்படும் என ஆடி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

ஆடி நிறுவனம் பெரிய பிரீமியம் கிராஸ்ஓவர் மற்றும் எஸ்யுவி மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ஆடி Q2 மாடல் அக்டோபர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 190 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- ஆடி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
- 2021 ஆண்டை விட கடந்த ஆண்டு 44 சதவீதம் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை ஆடி வினியோகம் செய்து இருக்கிறது.
ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 1.61 மில்லியன் வாகனங்களை வினியோகம் செய்து இருக்கிறது. 2021 ஆண்டு ஐரோப்பா, ஜெர்மனி மற்றும் இதர முக்கிய சந்தைகளில் விற்றதை விட அதிக வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள்- ஆடி Q4 இ டிரான், ஆடி இ டிரான் GT குவாட்ரோ1 மற்றும் ஆடி இ டிரான் உள்ளிட்டவற்றுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன.
எலெக்ட்ரிக் பிரிவில் ஆடி Q8 இ டிரான மாடல் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த மாடல் 2023 மார்ச் முதல் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதற்குள் இந்த மாடலை வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்துள்ளனர். 2026 ஆண்டில் இருந்து ஆடி நிறுவனம் சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 196 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த ஆண்டு வினியோகம் செய்து இருக்கிறது. இது 2021 ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.3 சதவீதம் அதிகம் ஆகும். இதில் ஆடி A3 (+12.1 சதவீதம்), ஆடி A4 (+8.0 சதவீதம்) மற்றும் ஆடி Q5 (+2.7 சதவீதம்) வளர்ச்சியை பெற்றுள்ளன.
"எலெக்ட்ரிக் மொபிலிட்டி சரியான பாதையில் இருப்பதை உணர்த்தும் வகையில் எங்களின் ஆல் எலெக்ட்ரிக் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன. போட்டி மற்றும் புதுமைகள் நிறைந்த சூழலில், எங்களின் சர்வதேச குழு கடந்த ஆண்டு மேலும் ஒரு முறை கடினங்களை எதிர்கொண்டுவிட்டது."
"குழுவினரின் விடா முயற்சி, தலைசிறந்த நிர்வாக திறன் மற்றும் சீரான விற்பனை இலக்கு உள்ளிட்டவைகளுக்கு நன்றி. இதன் காரணமாக கடந்த ஆண்டு வியாபாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது," என ஆடி நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹில்டிகார்ட் வொர்ட்மேன் தெரிவித்து இருக்கிறார்.
- ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் புதிய Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது.
- சர்வதேச சந்தையில் Q3 ஸ்போர்ட்பேக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 மாடலை விட அதிக ஸ்போர்ட் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஆடி Q3 விலை ரூ. 44 லட்சத்து 90 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிது.
புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடல் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி Q3 எஸ்யுவி-யை விட புதிய Q3 ஸ்போர்ட்பேக் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புது ஸ்போர்ட்பேக் மாடலில் ஹனி-காம்ப் கிரில், பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் அலாய் வீல்கள், காரின் பின்புறம் டுவீக் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய Q3 ஸ்போர்ட்பேக் டிசைன் மற்றும் ஸ்டைலிங் அதிக கவனமுடன் உருாக்கப்பட்டு இருப்பது அதன் தோற்றத்திலேயே அறிந்து கொள்ள முடிகிறது. காரின் கேபின் பகுதியில் Q3 ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்ற தோற்றம், ஸ்போர்ட் அக்செண்ட்கள் உள்ளன.
இத்துடன் ஆடியின் டிஜிட்டல் காக்பிட், 8.9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்டம், MMI நேவிகேஷன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்ஃபேஸ், ஆடி சவுண்ட் சிஸ்டம் உள்ளது. இந்தியாவில் ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 45 TFSI வெர்ஷன் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 241 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 233 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
- புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய Q3 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை ரூ. 51 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் Fully Loaded ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் டெக்னாலஜி + S லைன் என அழைக்கப்படுகிறது.
டிசைனை பொருத்தவரை புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் கூப் ரூஃப்லைன், ஐந்து ஸ்போக்குகள் கொண்ட 18 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை-கிலாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், எல்இடி டெயில் லைட்கள், S-லைன் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டர்போ புளூ, கிளேசியர் வைட், க்ரோனோஸ் கிரே, மிதோஸ் பிளாக் மற்றும் நவரா புளூ என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

இண்டீரியர்கள் புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், நான்கு வித லம்பர் சப்போர்ட், ஆடி டிரைவ் செலக்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட், குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ஸ்போக் வீல் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆறு ஏர்பேக், TPMS, பார்கிங் ஏய்ட் பிளஸ் ரியர் வியூ கேமரா, ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.0 லிட்டர் TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆடிடோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆடி நிறுவனத்தின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடி Q3 ஸ்போர்ட்பேக் மாடலுடன் ஐந்து ஆண்டுகளுக்கு RSA சர்வீஸ், 2+3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறுகிய காலக்கட்டத்திற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.






