search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi car"

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    • தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர்.

    மழை தொடர்பான விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக மூன்று கார்கள் நீரில் மூழ்கியதில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

    வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் ஆடி ஏ6 ஆகியவை ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    "இனி வாழ்வதற்கு எதுவுமில்லை... என்னிடம் இருந்த 3 கார்களும் இப்போது போய்விட்டன" என்று அவர் தலைப்பிட்டு கார்கள் தண்ணீரில் மூழ்கிய படங்களை பதிவிட்டுள்ளார்.

    • அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக காட்டுபவர்.
    • அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும்.

    அவ்வகையில், அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
    • கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில் ஆடி நிறுவனம் Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து போல்ட் எடிஷன் சிரீஸை கொண்டு வர உள்ளது. Q5 இன் மாடல் ரூ.72.30 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் Q5 போல்ட் எடிஷனை ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.

    கிரில், ஆடி லோகோக்கள், ஜன்னல் சுற்றுகள், ORVMகள் மற்றும் ரூஃப்-ரெயில்கள் ஆகியவற்றில் உயர் பளபளப்பான கருப்பு பெயிண்ட் இதில் அடங்கும். மேலும், கிலேசியர் ஒயிட், நவெரா ப்ளூ, மித்தோஸ் பிளாக், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மான்ஹட்டன் கிரே ஆகிய ஐந்து வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது.


    அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி Q5 ஆனது நினைவக செயல்பாடு, 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் உதவி, ஆறு டிரைவ் மோட்கள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் காக்பிட், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

    இயந்திர ரீதியாக, Q5 ஆனது 2.0-லிட்டர் TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 261bhp மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    • தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
    • இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று  குற்றச்சாட்டும் எழுந்தது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

    • மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் டீக்கடை அமைக்கப்படுகிறது.
    • இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    சொகுசு காரான ஆடி காரில் டீக்கடை நடத்தி வரும் மும்பை வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை அமைக்கப்படுகிறது.

    வீடியோவில் அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆடி காரை நிறுத்தி இருந்தனர். பின்னர் கார் டிக்கியை திறந்து தங்கள் ஸ்டாலை திறந்து டீ வியாபாரம் செய்வதை காண முடிந்தது.

    இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
    • வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆடி காரில் வைத்து வாலிபர் ஒருவர் டீ வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆடி காருக்கு அருகே டேபிள் ஒன்றை வைத்து வாலிபர் டீ வியாபாரம் செய்கிறார். அந்த டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய பகுதி திறந்திருக்கிறது. அதில் சில பிளாஸ்குகள் உள்ளது. டீ விற்பனைக்காக இளைஞர் பயன்படுத்தும் கார் ஆடி ஏ6 கார் ஆகும்.

    இது செடான் ரகத்தை சார்ந்தது. இதன் தற்போதைய ஆரம்ப விலையே ரூ.61.60 லட்சம் என ஆகும். இது எக்ஸ் ஷோரும் விலை மட்டுமே. ஆன்ரோடு விலையும் சேர்த்தால் இன்னும் சில லட்சம் கூடுதலாகும். இந்த வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×