என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி கார்"

    • கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
    • 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    ஆடி இந்தியா நிறுவனம், சிக்னேச்சர் வரிசையில் கியூ3, கியூ3 ஸ்போர்ட் பேக் மற்றும் கியூ5 ஆகிய லிமிடெட் எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 3 கார்களிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றுள்ளது.

    இந்த என்ஜின் கியூ3, கியூ3 ஸ்போர்ட்பேக் ஆகியவற்றில் அதிகபட்சமாக 190 பி.எஸ். பவரையும், 320 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்தும். கியூ5-ல் 269 பி.எஸ். பவரையும், 370 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.

    புதிய கியூ3 மாடலில் 18 இன்ச் வி-ஸ்போக் அலாய் வீல்கள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    கியூ5 மாடலில் 19 இன்ச் அலாய் வீல்கள், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்களை கொண்ட ஆம்பி யன்ட் லைட்டிங், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    • 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
    • புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது.

    ஆடி நிறுவனம், மூன்றாம் தலைமுறை Q3 காரை சர்வதேச அளவில் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கும் புதிய Q3 மாடல் அசத்தலான அப்டேட்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இந்த காரில், 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தம் திறன் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 261 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 147 பிஎச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    மேலும், இதில் 11.9 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.8 இன்ச் மல்டி மீடியா இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 25.7 கிலோவாட் பேட்டரியுடன் கூடிய பிளக் இன் ஹைபிரிட் வசதியுடன் வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கார்களின் மாடல்களுக்கு ஏற்ப விலை குறைக்கப்படுகிறது.
    • பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரி குறைப்பு 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

    இதற்கிடையே, வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

    • இந்த கார் நிறத்தை மாற்றும் திறன் கொண்டது.
    • உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் இந்தக் கார் உள்ளது.

    மும்பை:

    இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீடா அம்பானி.

    இந்நிலையில், ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரான நீடா அம்பானி இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காரை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    நீடா அம்பானியின் Audi A9 Chameleon காரின் விலை ரூ.100 கோடி ஆகும். அவரது கணவரான அம்பானியின் காரின் விலையை விட இது அதிகம்.

    இந்த கார் நிறத்தை மாற்றும் திறன்களைக் கொண்டுள்ளது. இதன் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நிறத்தை மாற்ற முடியும். இந்த வாகனமானது மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

    இந்தக் கார் உலகிலேயே 11 பேரிடம் மட்டும்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய ஆடி Q3 அதன் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஆடி நிறுவனத்தின் புதிய Q3 எஸ்யுவி விரைவில் அறிமுகமாகிறது. வருகிற 16-ந்தேதி மூன்றாம் தலைமுறை Q3 SUV-யை வெளியிடுவதாக ஆடி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலின் புதிய வெர்ஷனாக இருக்கும். மேலும் 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய மாடலை விட குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மாடல் 2018 முதல் சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது. இந்த பெயர் முதலில் 2011-இல் நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து வாகன உற்பத்தியாளருக்கு நல்ல விற்பனை எண்ணிக்கையைக் கொண்டு வருகிறது. தோற்றத்தைப் பொறுத்தவரை, சமீபத்திய தலைமுறை ஆடி Q3 குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது பிக்சல் பாணி LED ஹெட்லேம்ப்களால் உருவாக்கப்பட்ட புதிய முன்புறம், புதிய வடிவமைப்பு கொண்ட கிரில் வழங்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் பிராண்டின் சமீபத்திய வடிவமைப்புக்கு சார்ந்ததாக இருக்கும். இதன் டெயில் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் கூர்மையான டீடெயிலிங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆடி Q3 அதன் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி அதன் டிஜிட்டல் அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. உட்புறத்தில் பெரிய திரைகள், MMI இன்ஃபோடெயின்மென்ட், கனெக்டிவிட்டி மற்றும் டிரைவர்-அசிஸ்ட் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது, ஆடி Q3 காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 hp பவரையும் 320 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் செயல்படுகிறது. பவர்டிரெய்ன் விருப்பங்களில் இப்போது மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

    தற்போது, ஆடி Q3 கார்கள் ரூ.45.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மாற்றங்கள் மூலம், இந்திய சந்தையில் இந்த எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு வரும்போது, அதன் விலை அதிகரிக்கும். கூடுதலாக, இது பிஎம்டபிள்யூ X1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA போன்ற கார்களுக்கு எதிராக தொடர்ந்து போட்டியிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
    • வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஆடி காரில் வைத்து வாலிபர் ஒருவர் டீ வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆடி காருக்கு அருகே டேபிள் ஒன்றை வைத்து வாலிபர் டீ வியாபாரம் செய்கிறார். அந்த டேபிள் மீது அடுப்பு, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பார்கோடு போன்றவை வைக்கப்பட்டுள்ளன. காரில் லக்கேஜ்களை வைக்க கூடிய பகுதி திறந்திருக்கிறது. அதில் சில பிளாஸ்குகள் உள்ளது. டீ விற்பனைக்காக இளைஞர் பயன்படுத்தும் கார் ஆடி ஏ6 கார் ஆகும்.

    இது செடான் ரகத்தை சார்ந்தது. இதன் தற்போதைய ஆரம்ப விலையே ரூ.61.60 லட்சம் என ஆகும். இது எக்ஸ் ஷோரும் விலை மட்டுமே. ஆன்ரோடு விலையும் சேர்த்தால் இன்னும் சில லட்சம் கூடுதலாகும். இந்த வீடியோ வைரலாகும் நிலையில் தொழில் யுக்திக்காக இதுபோன்று செய்யலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் டீக்கடை அமைக்கப்படுகிறது.
    • இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    சொகுசு காரான ஆடி காரில் டீக்கடை நடத்தி வரும் மும்பை வாலிபர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கடையை அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகியோர் நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள லோகந்த்வாலா சாலையில் தினமும் இந்த கடை அமைக்கப்படுகிறது.

    வீடியோவில் அமித் காஷ்யப் மற்றும் மண்ணுசர்மா ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆடி காரை நிறுத்தி இருந்தனர். பின்னர் கார் டிக்கியை திறந்து தங்கள் ஸ்டாலை திறந்து டீ வியாபாரம் செய்வதை காண முடிந்தது.

    இன்ஸ்ட்ராகிராமில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    • தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார்.
    • இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கேத்கர் நியமிக்கப்பட்டிருந்தார். யு.பி.எஸ்.சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்ற இவர் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது.

    இவர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மகாராஷ்டிரா அரசு என்ற பலகையும், சிவப்பு சைரன்விளக்கையும் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பூஜா புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.தேர்வு செயல்பாட்டில் சலுகைகள் பெற அவர் தன்னை பார்வை பாதிக்கப்பட்டவர் என்று குறப்பிட்டிருந்தார் என்று  குற்றச்சாட்டும் எழுந்தது.

    இதைப்போல பூஜாவின் தந்தை திலீப்கேத்கர் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அகமத் நகரில் வஞ்சித் பகுஜன்கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டார். அப்போது வேட்பு மனுத்தாக்கலின் போது தனக்கு ரூ.43 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பதாகவும், 40 கோடி சொத்து இருப்பதாகவும் திலீப் கணக்கு காட்டி இருந்தார். ரூ.40 கோடி சொத்து வைத்துள்ளவர் கிரீமிலேயரில் இல்லை என்று சான்று பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாய் கையில் துப்பாக்கியுடன் விவசாயிகளை மிரட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக பூஜாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பூஜாகேத்கர் மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் குழுவை அமைத்து உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் பூஜாவின் ஆடி சொகுசு காரை புனே போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். திருட்டு வழக்கில் சிக்கிய தனது உறவினர் ஒருவரை விடுவிக்கவும் பூஜா போலீசை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது

    • அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வமாக காட்டுபவர்.
    • அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார், கார் பைக் ரேஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுபவர். அஜித்குமார் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் பரவி வைரலாகும்.

    அவ்வகையில், அஜித் குமார் அவரது ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர்.

    மழை தொடர்பான விபத்துகளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் 30 வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் மழை காரணமாக மூன்று கார்கள் நீரில் மூழ்கியதில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

    வதோதராவில் வசிக்கும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ரூ. 50 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் ஆடி ஏ6 ஆகியவை ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    "இனி வாழ்வதற்கு எதுவுமில்லை... என்னிடம் இருந்த 3 கார்களும் இப்போது போய்விட்டன" என்று அவர் தலைப்பிட்டு கார்கள் தண்ணீரில் மூழ்கிய படங்களை பதிவிட்டுள்ளார்.

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரமடைந்த சொகுசு காரின் உரிமையாளர் கால் டாக்சி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி விசி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைரலாகும் 30 வினாடிகள் கொண்ட வீடியோவில், குடியிருப்பு வளாக பகுதியில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ஓலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இயங்கும் கார் ஒன்று வருகிறது. முன்னால் சென்ற ஆடி காரின் உரிமையாளர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்சி டிரைவரின் கார் லேசாக பம்பரில் மோதியுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர்கள், இறங்கி வந்த ஒருவர் ஓலா கார் ஓட்டுநரை அப்படியே தூக்கி வீசி தாக்குகிறார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு 11:20 மணியளவில் மும்பையில் உள்ள காட்கோபரில் உள்ள ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அதில் ஒரு பயனர், "இந்த திமிர்பிடித்த ஆடி பையன் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என்றார்.

    மற்றொரு பயனர், "இப்போதெல்லாம் சிலர் சக்தி வாய்ந்தவர்களாக மாற விரும்புகிறார்கள். அவர்கள் பலவீனமான நபர் மீது தங்கள் சக்தியைக் காட்டத் தொடங்குகிறார்கள்" என்றார்.

    ×