என் மலர்
நீங்கள் தேடியது "Audi"
- ஆடி நிறுவனத்தின் 2022 Q3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஆடி Q3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு (2+3 ஆண்டுகள்) நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை பெற முடியும்.

புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.
காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லைட்கள், பானரோமிக் சன்கிளாஸ், ஹை கிளாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், கம்பர்ட் கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச், ஆடி டிரைவ் செலக்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஆடி போன் பாக்ஸ், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங் பேககேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளன.
- ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Q3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- முன்னதாக ஆடி நிறுவனம் தனது A8L மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடி நிறுவனம் பிளாக்ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி விட்டன. புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் Q8 கார் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் கொண்ட ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புதிய அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய Q3 மாடல் அதிநவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் புதிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் அல்லது 10.1 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மேலும் குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
- பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.
பரமத்திவேலூர்:
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதல் நாள் புதுமண தம்பதிகள் அதிகாலை காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவர். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கால் அவரவர் வீட்டிலேயே நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் மாலை பொதுமக்களும்,குழந்தைகளும்,புதுமண தம்பதியினரும் தேங்காய் சுட்டு வழிபட்டனர்.
மாலை புதுமண தம்பதியினர்,குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவுல்,பொட்டு கடலை, நாட்டுச்சர்க்கரை,எள்,அரிசி,பாசிப்பருப்பு ஆகிய பொருட்களை இளம் தேங்காயில் அடைத்து வாதனா மரக்குச்சியில் இணைத்து தெருமக்கள் ஒன்று கூடி தீயில் சுட்டு மகிழ்ந்தனர். தீயில் சுட்டு வெடித்த தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயை உடைத்து உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தவற்றை அக்கம்,பக்கத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து உண்டு தலையாடி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
- ஆடி நிறுவனத்தின் புதிய A8 L மாடல் சக்திவாய்ந்த வி6 என்ஜின் கொண்டு இருக்கிறது.
- இந்த கார் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி கொண்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் புதிய ஆடி A8 L மாடலின் விலை ரூ. 1 கோடியே 29 லட்சம் என துவங்குகிறது. இதன் டெக்னாலஜி எடிஷன் விலை ரூ. 1 கோடியே 57 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி A8 L ஃபிளாக்ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதத்திலேயே துவங்கி விட்டது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் தற்போது இந்தியாவில்ல் வெளியாகி இருக்கிறது.

2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.
இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.
- ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
- கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-
ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.
கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



