

ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர வாகன உற்பத்தியாளர் ஆடி, இந்திய சந்தையில் தனது பெர்ஃபார்மன்ஸ் எஸ்.யூ.வி. SQ8 மாடலை அறிமுகப்படுத்தியது. புதய ஆடி SQ8 விலை ரூ. 1.78 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் Q8 மற்றும் RS Q8 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
புதிய SQ8 மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ V8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 500 ஹெச்.பி. பவவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.1 நொடிகளில் எட்டிவிடும்.
ஆடி Q8 சீரிசில் இருந்து புதிய SQ8 மாடலை வித்தியாசப்படுத்த தோற்றத்தில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் பல பாகங்களில் மேட் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் எக்சாஸ்ட் டிப்ஸ், புது டிசைன் கொண்ட அலாய் வீல்கள், எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
2026 ஆடி SQ8 மாடலில் டூயல் 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் எஸ் லைன் கிராஃபிக்ஸ், ஹெச்.யு.டி., எஸ்-லைன் பேட்ஜிங் கொண்ட ஸ்டீரிங் வீல், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புற இருக்கைகளில் ஹீட்டிங், கூலிங், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மசாஜ் வசதிகள் உள்ளன.