search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Audi Q5 Bold Edition"

    • ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.
    • கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

    இந்தியாவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் கார் நிறுவனங்களில் ஆடியும் ஒன்று. ஆடி என்றாலே விலையுயர்ந்த மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    இந்த நிலையில் ஆடி நிறுவனம் Q5 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து போல்ட் எடிஷன் சிரீஸை கொண்டு வர உள்ளது. Q5 இன் மாடல் ரூ.72.30 லட்சம் எக்ஸ்-ஷோரூமில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும் Q5 போல்ட் எடிஷனை ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் சென்று வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆடி க்யூ5 போல்ட் எடிஷன் கருப்பு ஸ்டைலிங் பேக்கேஜ் உடன் வெளிப்புற மேம்பாட்டைப் பெறுகிறது.

    கிரில், ஆடி லோகோக்கள், ஜன்னல் சுற்றுகள், ORVMகள் மற்றும் ரூஃப்-ரெயில்கள் ஆகியவற்றில் உயர் பளபளப்பான கருப்பு பெயிண்ட் இதில் அடங்கும். மேலும், கிலேசியர் ஒயிட், நவெரா ப்ளூ, மித்தோஸ் பிளாக், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் மான்ஹட்டன் கிரே ஆகிய ஐந்து வண்ணம் விருப்பங்களில் கிடைக்கிறது.


    அம்சங்களைப் பொறுத்தவரை, ஆடி Q5 ஆனது நினைவக செயல்பாடு, 360 டிகிரி கேமராவுடன் பார்க்கிங் உதவி, ஆறு டிரைவ் மோட்கள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர்கள் மற்றும் ஓலுஃப்சென் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் காக்பிட், வயர்லெஸ் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன.

    இயந்திர ரீதியாக, Q5 ஆனது 2.0-லிட்டர் TFSi பெட்ரோல் மோட்டார் மூலம் 261bhp மற்றும் 370Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதே நேரத்தில் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் எலக்ட்ரானிக் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    ×