என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadi Festival"
- மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
- ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.
வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி பெண்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு வழிபாடு செய்வார்கள்.
வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என
பெண்கள் வீடுகளிலும் கோவில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம்.
அன்று பெண்கள் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது.
மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை வீடுகளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுசரிப்பார்கள்.
சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள்
விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.
புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து
பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வாடிக்கை.
கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல்,
மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதுமே
அம்மன் கோவில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது.
- இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.
இதன் பின்னர் சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்காக சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்துள்ளனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான (பொறுப்பு) வளர்மதி, பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் ஆடி திருவிழா நடந்தது.
- ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டியில் ஆதிவடிவுடையாள்-ஆதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தலைமை பூசாரி ஆதிமுத்துக்குமார் சிறப்பு பூஜைகளை நடத்தினார். விழாவில் கிடா வெட்டி அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணன் தொடக்கிவைத்தார். முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ரத்தின ஜோதிமுருகன், விராலிப்பட்டி ஊரட்சிமன்ற தலைவர் காளியம்மாள் ஜெயபாலன், சீர்பாதம்தாங்கிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிரவன், வார்டு உறுப்பினர் காமாட்சி கோபிநாத், லலிதாம்பி கேஸ்வரர் கோவில் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர், ஆதிகொற்றவை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
- கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது.
குன்னூர்,
குன்னூர் உழவர் சந்தை, எல்ஐசி காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ஜெய் பவானி அம்மன் கோவிலில் 28-ம்ஆண்டு ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன் ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ காமேஸ்வரி பாராயணம், ஸ்ரீ சவுபாக்கிய காமேஸ்வரி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது. அதன்பிறகு மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மன் திருவீதி உலா தொடங்கியது. அய்யப்பன் கோவில், உழவர் சந்தை, ராக் பி சாலை, காமராஜபுரம், ரேலி காம்பவுண்ட், ப்ளூஹில்ஸ் வழியாக சென்றது. ஆடித்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது.
- வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
புதுச்சேரி:
தேங்காய்த்திட்டில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 36-ம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, வர சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், வடபத்திர காளியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து, பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் சுவாமிக்கு அபி ஷேகமும், திருக்க ல்யாண உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா., கூட்டுறவு பிரிவு அமை ப்பாளர் வெற்றிச்செல்வம் ஆகியோர் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ஆடிட்டர் பூவராக வன், துணைத் தலைவர் பட்டாபிராமன், செயலாளர் பிரேம்குமார், பொரு ளாளர் சிவஞானம், உறு ப்பினர் வெள்ளை யம்மாள் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
- ஆடித்தபசு திருவிழா திங்கட்கிழமை நடைபெறுகிறது.
- ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில், தவ மிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோமதி அம்பாள் காலை 5.40 மணிக்கு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணைச் செயலாளருமான ராஜ லெட்சுமி, சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் பிரகாஷ், சீதாலட்சுமி ராம கிருஷ்ணன், சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், அனுசியா மாரிமுத்து, அரசு ஒப்பந்ததாரர் கே.எஸ்.எஸ். மாரியப்பன், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், இசக்கியப்பன், நகர ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி
அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் பிரகாஷ், சபரிநாத், பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நகராட்சி சார்பில் ரதவீதிகள் சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட்டது இருந்தது.
- ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது.
- கூழ் மற்றும் பதார்த்தங்களை வீட்டில் சமைக்க வேண்டும்.
பொதுவாகவே ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் விசேஷமானது. ஆடி மாதம் ஞாயிற்று கிழமை அம்மன் வழிபாட்டை எப்படி முறையாக செய்து அம்மனின் அருள், ஆசியை முழுமையாக எப்படி பெறுவது? என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை மிகவும் விசேஷமானது. இந்த தினத்தில் நாம் அம்மனுக்கு கூழ் காய்ச்ச உகந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, ஆடி ஞாயிறு, அன்னதானத்திற்கும் உரிய தினம்.
கூழ் மற்றும் பதார்த்தங்களையும் வீட்டில் சமைக்க வேண்டும். முருங்கைக்கீரை, காராமணி குழம்பு, வாழைக்காய், கத்திரிக்காய், இவைகளோடு சில பேர் வீடுகளில் கொழுக்கட்டையும் செய்வார்கள். இவைகளை சமைத்து ஏழை எளிய மக்களுக்கு கூழுடன் சேர்ந்த பதார்த்தத்தை தானமாக அளிக்கும் பட்சத்தில், பல மடங்கு புண்ணியம் நம் குடும்பத்திற்கு சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு எந்த வாரம் உகந்த வாரமாக இருக்கின்றதோ, அந்த ஞாயிறு கிழமைகளில் அம்மனை இவ்வாறு வழிபாடு செய்யலாம். இந்த ஞாயிறு தான், வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 5 வாரங்களில் வரும் கிழமைகளில் உங்களுக்கு எந்த வாரம் உகந்ததாக உள்ளதோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- தேரை அலங்கரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது தேரோட்ட திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி தேருக்கு புதிய வண்ண அலங்கார திரைச்சீலைகள் இணைத்தல், தேரின் 4 சக்கரங்கள், குதிரைகள் உள்ளிட்டவைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி, தேர்கட்டை முட்டு தள்ளுதலுக்கு உரிய பிரேக் ஆகியவை புதுப்பித்து சரிபார்க்கும் பணிகள் மற்றும் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில், கோவில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியும், பணியாளர்களின் பணிகளையும் பார்வையிட்டார் அப்போது கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
- கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-
சந்தன தைலம்- சுகம் தரும்
திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்
பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்
அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்
நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
வில்வப்பொடி - யோகம் அளிக்கும்
பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்
பால் - மனக்கவலை தீரும்
தயிர் - மனநோய் அகலும்
தண்ணீர்- சாந்தி உண்டாகும்
நெய் - தொழில் சிறக்கும்
தேன் - குரல் இனிமை பெறும்
வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்
கரும்புச்சாறு - மன அமைதிபெறும்
இளநீர் - பக்தி பெருகும்
எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்
சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்
திருநீறு - துன்பம் நீங்கும்
சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்
நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்
பழவகை - திருவருள் பெறலாம்
வாழைப்பழம் - வறுமை ஒழியும்
கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்
எள் - சனி பயம் நீங்கும்
மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்
பூ மாலை- உடல் பிணி தீரும்
பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்
பச்சரிசி- தீராக்கடன் தீரும்
மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்
தேங்காய்- பொன்பொருள் சேரும்
பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்
கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.
முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்
ஏலம்- தீமைகள் நீங்கும்
உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்
எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்
எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்
எள்ளு சாதம் - பகை நீங்கும்
பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்
கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்
- முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் குடும்ப தெய்வமான பூவாடைகாரியை பூஜித்து வழிபட்டால் குடும்பம் தழைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் கடந்த முதல் ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலுக்கு பெண்கள் குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
2-வது ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இந்நிலையில் ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று, திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உலக மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி முத்துக்கண் மாரியம்மனுக்கு 3.50 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ரூ.500, ரூ.200, ரூ .50, ரூ20 மற்றும் ரூ10 என ஆகிய நோட்டுகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.