search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padaleeswarar temple"

    • தினசரி இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.
    • ஆடிப்பூர விழா 22-ந் தேதி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்போது பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழாவையொட்டி கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பெரியநாயகி அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு, விழாக்கான கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் இரவில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • 13-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
    • ஆடிப்பூர விழா 22-ந்தேதி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர விழா தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து வருகிற 13-ந்தேதி கொடியேற்றப்பட்டதும், தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர்.
    • இன்று ஞானப்பால் பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. தொடர்ந்து அதிகாரநந்தி கோபுர தரிசனமும், தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    அதையடுத்து வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா, திருக்கல்யாணம் பரிவேட்டை, குதிரை வாகனம், பிச்சாண்டவர் புறப்பாடு, தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளினர். அதையடுத்து அங்கு திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரில் சாமிகள் அசைந்தாடி வந்த கண் கொள்ளாக்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    நேற்று முன்தினம் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, அவரோகணமும், நேற்று இரவு தெப்ப உற்சவமும் நடந்தது. இதில் சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 7 முறை வலம் வந்தது. அதன்பிறகு சாமி மாட வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    • இன்று திருக்கல்யாணம், பரிவேட்டை நடக்கிறது.
    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. நேற்று முன்தினம் அதிகாரநந்தி கோபுர தரிசனமும், இரவு தெருவடைச்சான் உற்சவமும் நடந்தது. இந்நிலையில் நேற்று வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா நடந்தது.

    இதற்காக அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா காரணமாக வெள்ளி தேர் ஓடாததால் சக்கரம் பழுதாகி கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளி ரதம் ஓடவில்லை.

    இந்த ஆண்டு ரூ.5 லட்சம் செலவில் வெள்ளி ரதம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று வெள்ளி ரதத்தில் சாமிகள் வீதி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது.

    • 2-ந்தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வண்ணார மாரியம்மன் திருவிழா, எல்லைக்கட்டுதல் நிகழ்ச்சி, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல் உற்சவம், பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அன்று பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதையடுத்து சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. 5-ம் திருவிழாவான நேற்று காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது. இதில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோபுரம் முன்பு நின்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதையடுத்து இரவு தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. இதற்காக பாடலீஸ்வரர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி மேள, தாளங்கள் முழங்க தெருவடைச்சான் சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சாமி தேரடி தெரு, சங்கரநாயுடு தெரு, வரதராஜபெருமாள் கோவில் தெரு, போடிச்செட்டி தெரு வழியாக வந்து மீண்டும் தேரடி தெருவை வந்தடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யானை வாகனத்தில் நால்வர் புறப்பாடு, இரவு வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலா, நாளை (புதன்கிழமை) திருக்கல்யாணம் பரிவேட்டை, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) குதிரை வாகனம், இரவு பிச்சாண்டவர் புறப்பாடு தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி எழுந்தருளுகிறார்கள். தொடர்ந்து அங்கு கூடி நிற்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அப்போது தேரில் பாடலீஸ்வரர், அம்மனுடன் ஆடி அசைந்து வரும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு ரசிப்பார்கள்.

    அதன்பிறகு 3-ந்தேதி நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, 4-ந்தேதி தெப்ப உற்சவம், 5-ந்தேதி ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டம் 2-ந் தேதி நடக்கிறது.
    • 5-ந் தேதி பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதும், காலை 8.30 மணியளவில் வைகாசி பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

    இதையடுத்து இந்திர விமானத்தில் சாமி எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலில் தினசரி சிம்ம வாகனம், பூத வாகனம், நாக வாகனங்களில் சாமி வீதிஉலா நடக்கிறது. வருகிற 29-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், 30-ந் தேதி வெள்ளி ரதம் மற்றும் இந்திர விமானத்தில் வீதிஉலாவும், 31-ந் தேதி பரிவேட்டையும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருஞானசம்பந்தர் அழும் போது அம்பாள் நேரில் தோன்றி பால் கொடுத்ததாக ஐதீகம்.
    • பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் வைகாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலை, மாலை நேரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகளும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 13-ந் தேதி காலை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நடராஜர் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரியும், இரவில் முத்து பல்லக்குகளில் ராஜ வீதிஉலாவும் நடைபெற்றது. இந்த நிலையில் 11-வது நாள் விழாவான நேற்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

    அதாவது திருஞானசம்பந்தர் அழும் போது அம்பாள் நேரில் தோன்றி பால் கொடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீக விழா மூல நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவிலில் நடப்பது வழக்கம். அதன்படி மூல நட்சத்திரத்தையொட்டி நேற்று திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரர், பராசக்தி அம்மன், ஞானசம்பந்தர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    63 நாயன்மார்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி சிவகரக தீர்த்த குளத்தில் எழுந்தருளியதும், அங்கு ஒரு குழந்தையை திருஞானசம்பந்தராக பாவித்து தங்க தோடிகானாவில் வைத்து ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதிஉலாவும், இரவு 8.30 மணியளவில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் இன்று (திங்கட்கிழமை) தெரு வடைச்சான் உற்சவம் நடக்கிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து எல்லை கட்டுதல் நடந்தது. இதையொட்டி வண்ணார மாரியம்மன், பிடாரி அம்மனுக்கு தேரடி வீதியில் சிறப்பு பூஜைகளும், பிடாரி அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீப்பந்தம் ஏந்தி எல்லை கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர். அதன்பிறகு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் திருவிழா நடந்தது.

    அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்குகள், பூத வாகனத்தில் பாடலீஸ்வரர் வீதிஉலா நடைபெற்றது. விழாவில் நேற்று காமதேனு, கற்பக விருட்சம், நாக வாகனத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது இளைஞர்கள், முதியவர்கள் சிலம்பம் ஆடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், இரவு தெருவடைச்சான் உற்சவம் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) யானை வாகனம், நால்வர் புறப்பாடு, வெள்ளி ரதம், இந்திர விமானத்தில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். அப்போது அங்கு கூடி நிற்கும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தேர் மாலையில் நிலையை வந்தடையும்.

    மறுநாள் 18-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரி, 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவம், 20-ந்தேதி (திங்கட்கிழமை) திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
    கடலூர் பாடலீசுவரர் கோவிலில் பக்தர்கள் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி சன்னதிகளிலும், பிரகாரங்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பாடலீசுவரர் கோவில் பிரகாரங் களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு பலகை கோவிலில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய் ஆகியவற்றை அதற்கென வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் ஊற்றிச்செல்லலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    இது பற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-

    தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் பிரகாரங்களிலும், சன்னதிகளிலும் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே விளக்கு ஏற்றி வழிபட விரும்பும் பக்தர்கள், பாடலீசுவரர் சன்னதியின் சங்கு மண்டபத்தில் உள்ள சூரிய விளக்கிலோ அல்லது அம்மன் சன்னதியின் கொலு மண்டபத்தில் உள்ள சந்திர விளக்கிலோ, தாங்கள் கொண்டு வரும் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். விளக்கில் எண்ணெய் அதிகமாக இருந்தால், அதன் அருகில் பாத்திரங்களை வைத்துள்ளோம். அதில் எண்ணெய், நெய்யை ஊற்றிச்செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த உத்தரவை தொடர்ந்து பாடலீசுவரர் கோவில் முன்பு உள்ள கடைகளில் அகல் விளக்கு விற்பனையும் நேற்று நிறுத்தப்பட்டது.

    மாவட்டத்தில் 1,252 கோவில்களில்...

    இந்த தடை உத்தரவு பற்றி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி கூறுகையில், மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடாந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட கோவில்களுக்குள் நெய்விளக்கு, அகல் விளக்கு, எலுமிச்சை விளக்கு, தேங்காய் விளக்கு ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக கோவிலுக்குள் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள விளக்கில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடலாம் என்றார்.

    இந்த உத்தரவு மாவட்டத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உள்பட்ட 1,252 கோவில்களிலும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

    இதற்கிடையே அறநிலையத்துறையின் உத்தரவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    சாமி சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபடக்கூடாது என்று பக்தர்களுக்கு தடை விதிப்பது சரியல்ல. நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக கோவில்களில் விளக்கு ஏற்றித்தான் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் தீ விபத்து ஏற்படவா செய்தது? அப்படியே தீவிபத்து ஏற்பட்டிருந்தாலும் விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது என்று யாரும் சொல்லவில்லையே. எனவே பாரம்பரிய வழக்கத்துக்கு மாறாக அரசு உத்தரவிடக்கூடாது. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க வேறு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அதனை செய்யாமல் பாரம்பரியத்தை மாற்றும் நடைமுறையை திணிக்க அரசு முயற்சிக்கக்கூடாது. எனவே அறநிலையத்துறையின் உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர். 
    கடலூரில் பாடலீஸ்வரர் கோவில் வைகாசி பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நேற்று நள்ளிரவில் நடந்தது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசிப்பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடந்து வருகிறது.

    இந்த விழாவின் 5-ம் நாளான நேற்று காலை அதிகார நந்திகோபுர தரிசனமும், இரவு 11-30 மணிக்கு தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடந்தது. கோவில் முன்பு இருந்து புறப்பட்ட தெருவடைச்சான் சப்பரம் தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தேரோட்டமும், இரவு பஞ்சமூர்த்திகள் திருக்கோவிலை அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 
    ×