என் மலர்

  நீங்கள் தேடியது "Vaikasi thiruvizha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாளை பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
  • நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம் நடக்கிறது.

  திருச்சி அருகே குமாரவயலூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

  நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் மாலை 4 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி தேரில் எழுந்தருள செய்து, கோவில் மாடவீதிகளில் தேர் பவனி வரும். நாளை(ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வருதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 8 மணி அளவில் மின்விளக்கு அலங்காரம் மற்றும் பூ அலங்காரத்துடன் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

  14-ந் தேதி இரவு 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. தேரோட்டம் மற்றும் விசாக திருவிழாவிற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின்பேரில் உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
  • அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

  மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே திருபஞ்சாகையில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் காளியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் மற்றும் பால்குடம், அலகு காவடி, பறவைக் காவடி எடுத்து அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

  அதனைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்செந்தூர் கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
  • இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

  தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

  அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

  குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து திருநடை திறந்து திருவிளக்கு ஏற்றுதலும், காலை 6 மணிக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு திருக் கொடியேற்றமும் நடந்தது.

  காவி உடை அணிந்து தலைப்பாதை அணிந்த அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ, சிவா, அரகரா, அரகரா என்ற பக்தி கோ‌ஷத்துக்கு இடையே பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி வைத்தார்.

  தொடர்ந்து வாகன பவனியும், பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடந்தது. நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

  விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும் நடக்கிறது.

  வருகிற 31-ந்தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தலைமை பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், அன்னதர்மமும் நடக்கிறது.

  9-ம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும், 10-ம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி திங்கட்கிழமை 11-ம் திருவிழா நடக்கிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

  விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும், கலையரங்கில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  அன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு பணிவிடையும், காலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்கிறது. பால பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி வைக்கிறார். அன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகளும், இரவு அய்யா வெவ்வேறு வாகனங்களில் பவனியும் நடைபெறுகிறது.

  வருகிற 31-ந் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் நாள் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 11 மணிக்கு பதியின் வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் இரவு அனுமன் வாகன பவனியும் பத்தாம் நாள் விழாவில் இரவு இந்திர வாகன பவனியும் நடக்கிறது.

  அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி பதினொன்றாம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாட்களில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  திருவெறும்பூரில் பிரசித்தி பெற்ற நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவில் 63 நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  இதையொட்டி நேற்று இரவு அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் ஆகியவை நடைபெற்றது. இன்று மாலை பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதிஉலாவும், நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், நாளைமறுநாள்(சனிக்கிழமை) சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

  12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும், 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலையில் யானைவாகனம், பல்லக்கில் வீதிஉலாவும் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வருகிற 20-ந்தேதி ( ஞாயிற்று கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  இதையொட்டி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஸ்ரீவண்ணாரமாரியம்மன் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து 14-ந் தேதி இரவு 11 மணிக்கு எல்லை கட்டுதல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 15-ந் தேதி பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவமும் நடைபெறுகிறது. 18-ந் தேதி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதிஉலாவும் நடக்கிறது.

  வருகிற 19-ந் தேதி விநாயகருக்கு ஒரு நாள் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் பாடலீஸ்வரர் கோவிலில் 20-ந் தேதி வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்படுகிறது. விழாவை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளைகளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

  விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 24-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசன நிகழ்ச்சியும், இரவு தெருவடைச்சான் உற்சவமும், 26-ந்தேதி கைலாசவாகனம் கோபுர தரிசனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

  தொடர்ந்து 28-ந் தேதி விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 29-ந் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 30-ந் தேதி இரவு முருகன் தெப்ப உற்சவமும், 31-ந் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். 
  ×