search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Ayya Vaikundar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழாவில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது.
  • இன்று மாலை அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி அங்கு கலி வேட்டை நடக்கிறது.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  11 நாட்கள் நடக்கும் இவ்விழா வில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடைபெற்று வருகிறது.

  அய்யா கருட வாகனத்தில் பவனி

  இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம் என பல்வேறு வாகனங்களில் பவனி நடைபெற்றது. 7-ம் திருவிழாவான நேற்று மாலையில் அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பதியைச் சுற்றி பவனி வருதல் நடைபெற்றது.

  8-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளி அங்கு கலி வேட்டை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மலையில் ஆஞ்சநேயர் வாகன பவனியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்திர வாகன பவனியும் நடக்கிறது .

  தேரோட்டம்

  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

  நேற்று நடைபெற்ற கருட வாகன பவனியில் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ரத்தினபாண்டி, காசி, ஆதவன், நாதன், கண்ணன், வினோத், பாலகிருஷ்ணன், குனா மற்றும் ஆனந்த், ஸ்ரீரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளி யூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதா கிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.
  • பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

  சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யாவழி பக்தர்கள் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை, கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தந்தனர்.

  அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது.

  பக்கர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு குரு பால ஜனாதிபதி அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

  இரவு 7 மணிக்கு பிச்சிப்பூவால் அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.
  • இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும்.

  திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.

  பின்னர் காலை 6 மணிக்கு ஆடி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, மாலை 4 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

  தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார். தினமும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடைபெறும். மதியம் 12.05 மணிக்கு ஆடி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம், இனிமம் வழங்கப்படுகிறது.

  விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.
  • தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  அன்னதர்மம்

  கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ். தர்மர் கொடியேற்றுகிறார்.

  காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை, 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது.

  11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடையும் நடக்கிறது. இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது.

  தேரோட்டம்

  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தரபாகவதர் குமார் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1 மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

  விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணைத் தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழா 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
  • 21-ந்தேதி அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

  சென்னை செங்குன்றம் அருகே இடைப்பாளையத்தில் ஸ்ரீமன் அய்யா வைகுண்டர் அலங்காரபதி அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 23-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவில் தினமும் இரவு ஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

  வருகிற 21-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. 22-ந்தேதி சனிக்கிழமை இரவு விளக்கு பூஜை மற்றும் அய்யா வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 23-ந்தேதி ஞாயிற்றுக்கி ழமை மாலை 5 மணிக்கு செங்குன்றம் காந்தி நகர் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இருந்து அய்யா கருட வாகனத்தில் அலங்காரபதிக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

  இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் அய்யாவுக்கு சுருள் மற்றும் பலகார பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வருகிறார்கள். இரவு 7 மணிக்கு பக்தர்கள் அய்யாவுக்கு நேமிசம் செலுத்தும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மற்றும் தீராத நோய் தீர வத்தல் பால் அருந்தும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

  விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொள்கிறார்.

  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ். ரமேஷ் அய்யா, தர்மகர்த்தா ஏ. ஹரிஷ் சிவாஜி அய்யா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்னதானம் வழங்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

  இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

  இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம் நடத்தப்பட்டது.
  • தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

  களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது.

  இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார்.

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 7-ந்தேதி பரிவேட்டை நடக்கிறது.
  • 10-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

  களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணி விடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மூலஸ்தானத்தில் இருந்து பக்தர்கள் கொடி பட்டத்தை எடுத்து வந்து, கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க, சங்கு நாதம் இசைக்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

  விழாவில் களக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பால் கிணற்றின் அருகே பரிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் நாளான வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது.
  • அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர்.

  நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

  விழா நாட்களில் தினமும் பணிவிடை, உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அய்யா பல்வேறு வாகனங்களில் பவனி வருதல், சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டிகள், அய்யாவின் ஆன்மிக கச்சேரி, அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு அருள் பாலித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருவிழாவான நேற்று நடைபெற்றது. அதன்படி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 1 மணிக்கு பணிவிடை, பிற்பகல் 3 மணிக்கு யானை முன்னே செல்ல மயிலாட்டம், கோலாட்டம், சிங்காரி மேளம், நாதஸ்வரத்துடன் ஆஞ்சநேயர் தேர் முன்னே செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர் வீதிஉலா வந்தது. அய்யாவின் அன்பு கொடிமக்கள் காவி உடை அணிந்து, முத்துக்கொடை ஏந்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  அப்போது, வழிநெடுகிலும் மோர் தர்மம், பழ தர்மம், இனிப்பு தர்மங்கள், கோவில்விளை சந்திப்பில் வைத்து அன்னதர்மம் நடந்தது. மேலும், அன்பு கொடிமக்கள் வழிநெடுகிலும் சுருள் வைத்து வழிபட்டனர். தேரானது கோவிலில் இருந்து புறப்பட்டு மேலஉடையப்பன்குடியிருப்பு வழியாக கோவில்விளை சந்திப்பு வந்து பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அன்னதர்மம், வாணவேடிக்கை, நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 1 மணிக்கு அய்யாவின் வாகனப்பவனி, 2 மணிக்கு கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுசீந்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.
  • ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

  நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயண சாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 3 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 5 மணிக்கு பணிவிடை போன்றவை நடந்தது.

  மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார். அப்போது அய்யாவின் அன்பு கொடி மக்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.

  இரவு 10 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் ஊர் தலைவர் எம். தங்ககிருஷ்ணன் தலைமையில், ஊர் நிர்வாகிகள், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.