search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பு அருகேஆதிபரன் அரசம்பதியில் திருஏடு வாசிப்பு விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சாமிதோப்பு அருகேஆதிபரன் அரசம்பதியில் திருஏடு வாசிப்பு விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 25-ந்தேதி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது
    • 27-ந்தேதி பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அருகே கரம்பவிளையில் ஆதிபரன் அரசம்பதி உள்ளது. இங்கு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருஏடுவாசிப்பு 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடையும், கொடி பட்டம் வலம் வருதல், கொடியேற்றமும் நடைபெற்றது.

    விழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடை, பகல் உச்சிப்பணிவிடை, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு தர்ம சிறப்புகளோடு நிறைவுபெறும். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை காலை 7 மணிக்கு அன்னபால் தர்மம், 8 மணி முதல் 11.30 மணி வரை திருஏட்டு பலன் அருள்வாக்கு சட்டம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து தொட்டில் வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8.30 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. 26-ந் தேதி (சனிக்கிழமை) உலக சக்திகள் ஆதிபரனுக்குள் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது, 28-ந்தேதி (திங்கட்கிழமை) கொடி இறக்கம் மற்றும் இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அரசம்பதி தர்மசாலை ஸ்ரீகுருமண்டலம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×