என் மலர்tooltip icon

    வழிபாடு

    அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழா தொடங்கியது
    X

    அழகன்குளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பெருவிழா தொடங்கியது

    • இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன.
    • 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இதற்கான விழா நேற்று 23-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை 5 மணி அளவில் கணபதி வழிபாடு, விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று, அன்று மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற்றன.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வேண்டுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று(புதன்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு 7 மணிக்கு மேல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து 2-ந்தேதி காலை 7.20 மணிக்கு மேல் பால்குடம், காவடி, ரதகாவடி, சிலாகைக் காவடி, பறவை காவடி, மயில் காவடியும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளன. 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்கள் நா.சி.அ. சிதம்பரநாதன் ஆச்சாரி, மீ.ச. லோகநாதன் ஆச்சாரி ஆகியோர்கள் தலைமையில் கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் யோகேஸ்வரன், உதவி தலைவர் நாகநாதன், செயலாளர் பாலமுருகன், உதவிச்செயலாளர் செல்வ முனிஸ்வரன், பொருளாளர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×