என் மலர்

    நீங்கள் தேடியது "Thirukalyanam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7-ம் நாள் நிகழ்ச்சியாக சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் தெட்சணாமூர்த்தியை பிரார்த்தணை செய்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    மெலட்டூரில் உள்ள ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும்.

    10 நாள் பிரமேற்சவத்தில் 7-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து கோவில் வந்தனர்.

    அதனை தொடர்ந்து சகல சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைபவத்தில் திருமணமாகாத உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தணை செய்து கொண்டனர்.

    திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோற்சவவிழா ஏற்பாடுகளை குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
    • நாளை காலை சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னையை சேர்ந்த பிரபல பரத நாட்டிய கலைஞர், முனைவர் அர்ச்சனா நாராயணமூர்த்தி அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுவாமி சித்தி, புத்தி விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    நாளை 15 ந்தேதி காலை 9 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை மெலட்டூர் எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை தொடங்கி வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெற உள்ளது.
    • வருகிற 15-ந் தேதி சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில் 10 நாட்கள் உற்சவம் இன்று 8 ந்தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வரும் 15ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர்கோயில் விவாஹ வரம் தந்து அருளக்கூடியவர்

    ஸ்ரீஞானபுரத்தில் ஸ்ரீகர்க மஹரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமாக உள்ளது.

    இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் மெலட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது இங்கு வருடந்தோறும் விநாயகர் சதர்த்திவிழா 10 நாட்கள் பிரமோற்சவம் நடந்துவருகிறது பிரமோற்ச வத்தின் முக்கிய நிகழ்வாக ஏழாவது நாள் நிகழ்ச்சியன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும் ஸ்ரீவிநாயகர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி மிக அரிதான நிகழ்ச்சியாகும்.

    அன்றைய தினம் காலையில் ஸ்ரீ தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும் இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

    திருமணம் ஆகாதவர்களும், திருமணம் காலதாமதமாகும் ஆண்களும்,பெண்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து ஸ்ரீசித்தி புத்தி ஸமேத ஸ்ரீதெட்சணா மூர்த்தியை தரிசித்து பிரார்த்தனை செய்து மலர் மாலையும், மஞ்சள் கயறும் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

    இந்த ஆண்டு பிரமோத்ச வம் செப்டம்பர் மாதம் 8ந்தேதி இன்று காலை தொடங்கி 18 ந்தேதிவரை 10 நாட்கள் நடைபெறுகிறது. 7ஆம் நிகழ்ச்சியாக 15 -ம்தேதி காலை 9.30 மணியளவில் பிரமோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறவுள்ளது.

    ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
    • திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை கிராமத்தில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. குருஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த கோவிலில் இருநது திருடி செல்லப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளுக்கு யாக பூஜை நடந்தது.

    இதைத் தொடர்ந்து சித்திர ரத வல்லப பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உள்ள மண்ட பத்தில் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக செயல் அலுவலர் பாலமுருகன், உபயதாரர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நடந்தது.

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
    • திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.s

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று வள்ளி மணவாள பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகமும், பின்னர் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

    இயைடுத்து காலை 11 மணிக்கு ஆனந்தன் குருக்கள் தலைமையில் திருக்கல்யான நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமண தடை நீங்க ஏராளமானோர் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் வழிபாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்ற ழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். செவ்வாய்கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை அண்ணாமலையார் ஆன்மீக வழிபாட்டு குழு சார்பில் சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நாளை மறுநாள்(3-ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மூலவருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு வள்ளி மணவாள பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 11 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து மதியம் 12 மணிக்கு சுவாமி பிரகார புறப்பாடும் மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், வழிபாட்டு குழுவினரும் செய்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெரு மாளுக்கு நடத்தப்படுவது வழக்கம். இதனையொட்டி, காலை 8 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடை பெற்றது.

    இதன் முக்கிய நிகழ்வாக, இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற்றது.

    உற்சவத்தில் திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாள் திருக்கல்யா ணத்தை கண்டு தரிசனம் செய்தால் திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது கோவிலின் சிறப்பு என்பதால் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கும்மி அடித்து வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் சீனிவாசா திருக்கல்யாணம் வைபவத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் பூலாங்கு றிச்சியில் திருக்கல்யாணம் நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு பூலாங்குறிச்சி கலைக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைத்து வாழை மர தோரணங்கள் மின்விளக்குகள் கொண்டு பந்தல் முழுவதும் அலங்க ரிக்கப்பட்டன. வண்ண விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட மண மேடையில் உற்சவர்கள் ஸ்ரீ தேவி பூதேவி சீனிவாச பெருமாள் சர்வ அலங்கா ரத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினார்கள்.

    தொடர்ந்து யாக பூஜை கள் திருமண சடங்கான காப்பு கட்டுதல் கன்னிகா தானம், பட்டு வஸ்திரம், பட்டுச்சேலைகள் சாத்தப்பட்டு பின்னர் திருமாங்கல்ய மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தி யம் முழங்க வேத மந்தி ரங்கள் ஒலிக்க பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேவி யர்களுக்கு திருமாங்கல்யம் அணி விக்கப்பட்டது.

    தொடர்ந்து கற்பூர தீபாராதனை காண்பித்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் வாரணம் ஆயிரம் பூஜைகள் நடைபெற்று கோடி தீபம் கும்ப தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்ச னைகள் செய்யப்பட்டன. நிறைவாக ஏகமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப் பட்டது.

    இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருக்கல்யா ணத்தை கண்டு வழிபட்டனர்.கலந்து கொண்ட பக்தர்கள் அனை வருக்கும் திருப்பதி யில் இருந்து கொண்டு வரப்பட்ட லட்டு பிரசா தங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அபிராமி ராமநாதன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .
    • பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக 14- வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .

    மாலை திருக்கல்யாண விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்மனுக்கும் மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இங்கு பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாடிப்பட்டி அருகே ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.
    • இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே நீரேத் தானில் பழமையும் பெரு மையும் வாய்ந்த விஜயநகர பேரரசுகாலத்தில் கட்டப் பட்ட குகை வடி வத்தில் கைகளில் வெண்ணெய் ஏந்தி கோலத்தில் அருள் பாலிக்கும் நவநீதப்பெரு மாள் கோவில் உள்ளது.

    இங்கு ஆண்டாள் திருக்கல்யாணம் விமரிசை யாக நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம் கோ பூஜையுடன் தொடங்கியது. 7 மணியிலிருந்து 9மணிவரை மண மகன், மணமகள் அழைப்பு, முளைப்பாலிகை, காப்புகட்டுதல் நடந்தது. 10.30 மணிமுதல் 11.30 மணிக்குள் பாலாஜிபட்டர் ஹோமம் வளர்க்க நவநீத பெருமாள் - ஆண்டாள் திருமாங்கல்யதாரணம் திருக்கல்யாணம் நடந்தது.

    11.30மணிமுதல் 1 மணிவரை கச்சைகட்டி யதி ராஜர், காக்கூர்கண்ணன், சுந்தரராமானுஜர் கோஷ்டியினரின் நாச்சியார் திருமொழிபாடப்பட்டது. மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு நீலபட்டாடைஉடுத்தி ஆண்டாள்- நவநீத பெரு மாளுக்கு ஊஞ்சலாட்டும் லாலிபாட்டுடன் பஜன் பாடப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதன் ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், அர்ச்சகர்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo