search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    600கிமீ ரேன்ஜ் வழங்கும் 2023 ஆடி Q8 இ டிரான் அறிமுகம்
    X

    600கிமீ ரேன்ஜ் வழங்கும் 2023 ஆடி Q8 இ டிரான் அறிமுகம்

    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.

    ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

    2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.

    புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×