என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹூண்டாய் வென்யூ"

    • புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வென்யூ N லைன் விலை ரூ.10.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் மூன்று வேரிண்ட்கள் மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாடுகள் தொடங்கியதில் இருந்து அதன் புனே ஆலையில் இருந்து வெளிவரும் முதல் புதிய ஹூண்டாய் தயாரிப்பு இதுவாகும்.

    N லைன் மாடல் வழக்கமான வென்யூவுடன் உள்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தின் பெரும்பகுதியைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பம்பர்கள், சக்கரங்கள் மற்றும் நிறங்கள் மட்டும் N லைன் மாலுக்கு ஏற்ப வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களைப் பார்க்கும்போது, இது வென்யூ மாடலின் HX8 மற்றும் HX10 வேரியண்ட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதே அம்சப் பட்டியலைப் பெற்று இருப்பதை கவனிக்க முடியும்.

    டாப் என்ட் N10 வேரியண்ட் லெவல் 2 ADAS, இரட்டை வளைந்த 12.3-இன்ச் பனோரமிக் டிஸ்ப்ளே, ஆட்டோ IRVM, LED இன்டிகேட்டர்கள், பவர்டு டிரைவர் சீட், ரிக்ளைனிங் ரியர் சீட், பின்புற ஜன்னல் சன்ஷேட், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், ஹூண்டாய் ப்ளூ-லிங்க் மற்றும் க்ளோவ் பாக்ஸ் கூலிங் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.



    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் ஹூண்டாயின் 1.0 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 118bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டாப் என்ட் N10 வேரியண்டில் டிராக்ஷன் மற்றும் டிரைவ் மோட்களுடன் வருகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் கியா சொனெட் X லைன், டாடா நெக்சான் ரெட் டார்க் ரேஞ்ச், மஹிந்திரா XUV 3XO டர்போ ரேஞ்ச், மாருதி Fronx டர்போ, ஸ்கோடா கைலாக் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவை போட்டியாக அமைகின்றன.

    ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளதாக அறிவித்து இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வென்யூ மாடல் இந்திய விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனஅயூ 2021 வாக்கில் 1 லட்சத்து 08 யூனிட்கள் வரை விற்பனையாகி இருந்தது. 

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்டு உள்ள வென்யூ மாடல்களில் 18 சதவீத யூனிட்கள் புளூ லின்க் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் கொண்டு இருக்கிறது. 2021 ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 2 லட்சத்து 50 ஆயிரம் எஸ்.யு.வி.க்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 42 சதவீத யூனிட்கள் ஹூண்டாய் வென்யூ மாடல் ஆகும். மேலும் இந்திய சந்தையில் இந்த பிரிவில் வென்யூ மாடல் மட்டும் 16.9 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் யூனிட், 1.5 லிட்டர் டீசல் யூனிட் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், iMT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது. முன்னதாக வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. இது குறித்து ஹூண்டாய் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாக ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் டிசைன் விவரங்களு்ம இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், ஹூண்டாய் தனது வென்யூ மாடலுக்கான முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.

     ஹூண்டாய் வென்யூ

    தற்போது இந்திய சந்தையில் ஹூண்டாய் வென்யூ மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 82 ஹெச்.பி. பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல், iMT மற்றும் DCT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை தவிர ஹூண்டாய் வென்யூ டீசல் வேரியண்டில் 99 ஹெச்.பி. பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ×