search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai"

    • ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா செடான் மாடலின் தேர்வு செய்யப்பட்ட iVT மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்பட வேண்டிய கார்களை பயன்படுத்துவோரை ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    காரில் உள்ள எலெக்ட்ரிக் ஆயில் பம்ப் கண்ட்ரோலரில் பிரச்சினை ஏற்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் ஆகும். பிரச்சினை சரி செய்வதற்காக அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்.

    பாதிக்கப்பட்ட வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும். முன்னதாக கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி.-யை இதே பிரச்சினையை சரி செய்வதற்காக 4 ஆயிரத்து 300 யூனிட்களை ரிகால் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.

    கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.

    • ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடல் இது.
    • கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்கள் வெளியானது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் மார்ச் 11-ம் தேதி புதிய கிரெட்டா N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடலாக கிரெட்டா அறிமுகமாக உள்ளது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்போர்ட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டது. இதன் முன்புறம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. பின்புறம் ரூஃப்-இல் ஸ்பாயிலர் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பம்ப்பர், டிஃப்யூசர் உள்ளது. கிரெட்டா N லைன் மாடல் தண்டர் புளூ மற்றும் பிளாக் ரூஃப் எனும் புதிய ஆப்ஷனில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 160 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    • டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது i20 ஹேச்பேக் காரின் புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஸ்போர்ட்ஸ் ட்ரிமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் ஹூண்டாய் i20 ஸ்போர்ட்ஸ் (O) மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 73 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய i20 வேரியன்ட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டூயல் டோன் விலை ரூ. 8 லட்சத்து 88 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் வேரியன்டை விட ரூ. 35 ஆயிரம் வரை அதிகம் ஆகும். கூடுதல் விலைக்கு இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், கதவின் ஆரம்-ரெஸ்ட்-இல் லெதர் ஃபினிஷ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் i20 மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் iVT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்போர்ட்ஸ் (O) வேரியன்ட் சேர்த்து i20 மாடல் இரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஆஸ்டா மற்றும் ஆஸ்டா (O) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 04 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 11 லட்சத்து 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தகவல்.
    • சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில், ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலும் அதன் ஐ.சி. என்ஜின் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போதைய ஸ்பை படங்களில் கிரெட்டா EV மாடலின் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், நோஸ் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்ட சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

     


    கிரெட்டா EV மாடலில் ஏரோடைனமிக் திறன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் கிரெட்டா EV மாடலின் சில அம்சங்கள் ஐயோனிக் 5 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி கிரெட்டா EV மாடலில் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்றும் இவற்றை எல்.ஜி. நிறுவனம் வினியோகம் செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இது எம்.ஜி. ZS EV மாடலில் உள்ள 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட அளவில் சிறியதாகும்.

    • தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.
    • முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை கொண்டு வந்துள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உட்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபடுத்தும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.

    இந்த புதிய படைப்புக்கு ஹூண்டாயின் இ-கார்னர் அமைப்பு காரணமாகும். இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தின் சோதனை கண்டுபிடிப்பு ஆகும். இது முதலில் அதன் காட்சியை உருவாக்கி காட்டியது. மேலும், சக்கர கோணங்களை மாற்றுவதன் மூலம் மற்றும் குறுகிய தெருவில் இருந்து வெளியேற 180-டிகிரி திருப்புதல் செய்வதன் மூலம் இறுக்கமான இடங்களில் வாகன நிறுத்தம் போன்ற திறன்களை கொண்டது.

    பக்கவாட்டாக ஓட்டுவது மற்றும் 360 டிகிரி வட்டத்தில் திரும்புவது, தேவையான சக்கரங்களின் இணைப்பை மட்டும் திருப்புவது என இந்த காரில் அதிக முக்கிய அம்சங்கள் இருக்கின்றன.

    இந்த வாகனம் "ஜீரோ டர்ன்" திருப்பு முறையில் செயல்படுகிறது. இதில் முன் சக்கரங்கள் உள்நோக்கிச் சுழலும் மற்றும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாகச் சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்கின்றன.

    இந்த செயல்பாடு, குறைந்த இயக்கத்துடன் ஒரு சிறிய இடத்தில் வாகனத்தின் திசையை எளிதாக மாற்றுவதற்கு, பார்க்கிங் பிரச்சனைகளுக்கு தீர்வாக ஓட்டுநருக்கு உதவுகிறது.

    நண்டின் நடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

    • இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
    • வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பாக்கப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    2024 ஹூண்டாய் கிரெட்டா மாடலின் முன்புறம் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய கிரில், ரிவைஸ்டு எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர், ஸ்கிட் பிலேட், புதிய பொனெட் மற்றும் அதிக கவர்ச்சிகர எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இதன் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், பின்புறத்தில் கனெக்டெட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பின்புற பம்ப்பரில் புதிய டெயில்கேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரின் கேபின் மாற்றப்பட்டு அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் புதிய டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஏ.சி. வென்ட் உள்ளது.

    இத்துடன் 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக், 70-க்கும் அதிக கனெக்டெட் தொழில்நுட்பங்கள், 19 அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.

    • சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.
    • இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    அதன்படி, மிச்சாங் புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    மேலும், மாநில அரசுடன் இணைந்து இந்த பேரிடரை எதிர்த்து போராடுவோம் எனவும் அறிவித்துள்ளது.

    • டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சம் என்று நிர்ணயம்.
    • அல்கசார் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிப்பு.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஹூண்டாய் கார் வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஹூண்டாய் ஆரா மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. ஆரா CNG மாடல்களுக்கு ரூ. 33 ஆயிரமும், பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 23 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 6 லட்சத்து 44 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     

    ஹூண்டாய் அல்கசார் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதன் டீசல் வேரியண்ட்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 லட்சத்து 77 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 21 லட்சத்து 13 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹூண்டாய் வெர்னா மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரமும், ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் டக்சன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இது டீசல் வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். 

    • ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில், புதிய i20 காரின் N லைன் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹூண்டாய் i20 N லைன் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    2023 ஹூண்டாய் i20 N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காரில் போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், 127 எம்பெட் செய்யப்பட்ட வி.ஆர். கமாண்ட்கள், ஓ.டி.ஏ. அப்டேட்கள், வாய்ஸ் கமாண்ட், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே, தண்டர் புளூ மற்றும் ஸ்டேரி நைட் உள்ளிட்டவை மோனோ-டோன் ஆப்ஷனிலும், அட்லஸ் வைட் மற்றும் தண்டர் புளூ இரண்டு நிறங்களுடன் அபைஸ் பிளாக் ரூஃப் டூயல்-டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றன.

    ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்திய சந்தையில் 2023 ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்கும் நிலையில், இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் எட்டுவிதமான நிறங்கள் மற்றும் ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்வெர்டெட் எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், ரிவொர்க் செய்யப்பட்ட பம்ப்பர்கள், 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய கிரில் மற்றும் பொனெட்டில் 3D ஹூண்டாய் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    காரின் உள்புறத்தில் கிரே மற்றும் பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் போஸ் 7-ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், செமி லெதர் இருக்கைகள், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கைகள், டோர் ஆர்ம்ரெஸ்ட்கள் உள்ளன. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி., ஹெச்.வி.ஏ.சி., வி.எஸ்.எம்., ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின், ISG வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் IVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • இந்தியாவில் ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • வென்யூ நைட் எடிஷன் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வென்யூ நைட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் S(O) மற்றும் SX(O) வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய வென்யூ நைட் எடிஷன் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை வென்யூ ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிளாக் நிற முன்புற கிரில் உள்ளது. இத்துடன் ஹூண்டாய் லோகோ இடம்பெற்று இருக்கிறது. கருப்பு நிறத்தால் ஆன ரூஃப் ரெயில்கள், பிராஸ் இன்சர்ட்கள், பிளாக் அலாய் வீல்கள், பாடி நிறத்தால் ஆன டோர் ஹேன்டில்கள், நைட் பேட்ஜ் உள்ளது.

     

    காரின் உள்புறம் பிளாக் இன்டீரியர், பிராஸ் இன்சர்ட்கள், டூயல் கேமரா கொண்ட டேஷ்கேம், ஸ்போர்ட் மெட்டல் பேட்கள், 3D ஃபுளோர் மேட்கள், பிளாக் நிறத்தால் ஆன இருக்கை மேற்கவர்கள் மற்றும் பிராஸ் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடல் மோனோடோன் மற்றும் டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மோனோடோன் ஆப்ஷன் அபிஸ் பிளாக், அட்லஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே மற்றும் ஃபியெரி ரெட் நிறங்களிலும், டூயல் டோன் ஆப்ஷனில் ஃபியெரி ரெட் மற்றும் அபிஸ் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    ×