என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hyundai Motor"

    • அனைத்துப் பிரிவுகளிலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காலகட்டத்தில் 1,17,458 யூனிட்கள் விற்பனை.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) அதன் SUV, ஹூண்டாய் க்ரெட்டா ஜனவரி முதல் ஜூலை 2025 வரை அனைத்துப் பிரிவுகளிலும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் 1,17,458 யூனிட்கள் விற்பனையாகி, ஆண்டுக்கு ஆண்டு 8% வளர்ச்சியுடன் (ஜனவரி முதல் ஜூலை 2024 வரை), ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து "இந்திய வாகன நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி, வாடிக்கையாளர்களிடையே ஒரு சிறந்த தேர்வாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் கிரெட்டாவின் பத்தாண்டுகளைக் கொண்டாடும் வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத அன்பு மற்றும் நம்பிக்கையால் நாங்கள் உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறோம். ஜனவரி - ஜூலை 2025 காலகட்டத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் காராக மாறுவது ஒரு விற்பனை மைல்கல் மட்டுமல்ல, பல ஆண்டுகளாக கிரெட்டா உருவாக்கிய உணர்ச்சிபூர்வமான தொடர்பையும் இது பிரதிபலிக்கிறது.

    நாங்கள் முன்னேறும்போது, வாடிக்கையாளர் அனுபவத்தைத் தொடர்ந்து உயர்த்துவதில் எங்கள் உறுதிப்பாடு உறுதியாக உள்ளது" என்று அவர் கூறினார்.

    • ஹூண்டாய் ஆரா S AMT 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
    • இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது என்ட்ரி லெவல் செடான் மாடல் ஹூண்டாய் ஆரா புதிய வேரியண்ட் -S AMT-ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய வேரியண்ட் மூலம், ஹூண்டாய் நிறுவனம் அதன் மேம்பட்ட AMT தொழில்நுட்பத்தை பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்று கூறுகிறது.

    இளம் இந்திய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வேரியண்ட் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், மலிவு விலை செடானில் ஸ்டைல், வசதி மற்றும் சௌகரியத்தின் சரியான கலவையை வழங்குவதாகவும் ஹூண்டாய் கூறுகிறது.

    புதிய வேரியண்ட் அறிமுகம் குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் நிறுவனத்தில், பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் மொபிலிட்டியை அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹூண்டாய் AURA S AMT-யில் மேம்பட்ட AMT டிரான்ஸ்மிஷனை அறிமுகப்படுத்துவது, தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க செய்வதும் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதற்கும் எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

    இந்த அறிமுகத்தின் மூலம், மலிவு விலையில் உயர்ந்த சௌகரியம், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் வசதியை என்ட்ரி லெவல் பிரிவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார்

    ஹூண்டாய் ஆரா S AMT 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முறையே 83 hp பவர் மற்றும் 113.8 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

    மேலும், புதிய ஹூண்டாய் ஆரா S AMT வேரியண்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), LED டே-லைட் ரன்னிங் லேம்ப்கள் (DRLs), 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

    இந்த அம்சங்களைத் தவிர, பின்புறம் மையத்தில் ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் பின்புறத்தில் 12-V சார்ஜிங் போர்ட்கள், USB மற்றும் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய 2-DIN ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் பவர் விண்டோக்கள் போன்ற உட்புற அம்சங்களும் இதில் அடங்கும்.

    ஹூண்டாய் ஆரா S AMT ரூ.8,07,700 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது மொத்தம் ஆறு வேரியண்ட்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் விலை ரூ.6.48 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    • புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹூண்டாய் அல்கசாரின் சீரிசை பன்முகப்படுத்தியது.
    • வாய்ஸ் அசிஸ்ட் ஸ்மார்ட் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) தற்போது வெர்னா சீரிசில் புதிதாக SX+ வேரியண்டை ரூ.13,79,300 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேனுவல் மற்றும் iVT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இரண்டிலும் கிடைக்கிறது. வெர்னா SX+ வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பல்துறை மற்றும் அம்சம் நிறைந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்க உள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

    புதிய வெர்னா மாடல் சீரிசை விரிவுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஹூண்டாய் நிறுவனம் அதன் ஏழு மாடல்களான கிராண்ட் ஐ10 நியோஸ் (Grand i10 NIOS), எக்ஸ்டர் (Exter), வெர்னா (Verna), ஆரா (Aura), வென்யூ (Venue), வென்யூ என் லைன் (Venue N Line) மற்றும் அல்கசார் (Alcazar) ஆகியவற்றில் தடையற்ற வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே (Apple CarPlay) மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) கனெக்டிவிட்டியை வழங்க வடிவமைக்கப்பட்ட புதிய வயர்டு டு வயர்லெஸ் அடாப்டரையும் அறிமுகப்படுத்தியது.

    எதிர்கால ஸ்டைலிங், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், விசாலமான உட்புறங்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் செயல்திறன் ஆகியவற்றுடன் ஹூண்டாய் வெர்னா சீரிசை மறுவரையறை செய்துள்ளது. மேலும் வெர்னா மாடல் குளோபல் NCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டில், பாதுகாப்பில் முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெர்னா SX+ வேரியண்ட், போஸ் பிரீமியம் சவுண்ட் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், லெதர் சீட் இருக்கை மேற்கவர்கள், முன்பக்கம் வென்டிலேட்டெட் மற்றும் ஹீட்டெட் இருக்கை, முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், LED ஹெட்லேம்ப்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல பிரீமியம் அம்சங்களைக் கொண்டுள்ளது.

    மேலும், புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஹூண்டாய் அல்கசாரின் சீரிசை பன்முகப்படுத்தியது. குறிப்பாக, டீசல் பவர்டிரெய்னுக்கான புதிய கார்ப்பரேட் மாறுபாட்டை பிராண்ட் அறிமுகப்படுத்தியுள்ளது, அதோடு வாய்ஸ் அசிஸ்ட் ஸ்மார்ட் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.

    அமெரிக்காவில் நடைபெற்று வரும் சான் டீகோ காமிக்கான் திருவிழாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் கோணா ஐயன் மேன் எடிஷன் அறிமுகம் செயய்ப்பட்டு இருக்கிறது. #KonaIronManEdition
     


    உலகளவில் காமிக் புத்தகம் சார்ந்த சூப்பர் ஹீரோக்களில் மிகவும் பிரபலமான கதாபாத்திரமாக ஐயன் மேன் இருக்கிறது. இதனை சரியாக புரிந்து கொண்ட ஹூன்டாய் அமெரிக்காவில் நடைபெறும் காமிக்கான் திருவிழாவில் ஐயன் எடிஷன் கோணா காரினை அறிமுகம் செய்துள்ளது.

    ஹூன்டாய் கோணா ஐயன் மேன் எடிஷன் உற்பத்தி டிசம்பர் 2018-இல் துவங்கி 2019-ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரவிருக்கிறது. 2019 ஹூன்டாய் கோணா ஐயன் எடிஷனின் முன்பக்கம் கஸ்டம் எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இது பார்க்க ஐயன் மேன் சூட் ஃபேஸ்மாஸ்க் (முகமூடி) போன்றே காட்சியளிக்கிறது. கோணாவின் வடிவமைப்பில் ஐயன் மேன் சூட் மிக முக்கிய அங்கம் வகித்திருக்கிறது.



    இதுதவிர காரின் ரூஃப் ஐயன் மேன் மாஸ்க் மோடிஃப் போன்றும், V வடிவம் கொண்ட ஹூட் கார்னிஷ், பொனெட்டில் ஐயன் மேன் மற்றும், டீக்கல்களில் ஸ்டார்க் இன்டஸ்ட்ரீஸ் என பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. கஸ்டம் 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் அதன் சென்டர் கேப் ஐயன் மேன் மாஸ்க் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற நிறம் டூயல்-டோன் ஐயன் மேன் ரெட் மற்றும் மேட் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் உள்புறம் ஐயன் மேன் சிக்னேச்சர் ஐயன் மேன் கியர்நாப், பிரத்யேக ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, சென்டர் கன்சோலில் ஐயன் மேன் கிராஃபிக்ஸ் மற்றும் கஸ்டம் சீட் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

    மார்வெல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதன் மூலம் மக்கள் விருப்பத்துடன் அதிகம் பயன்படுத்தும் விஷயத்தில் பங்கேற்று இருப்பது சிறப்பான அனுபவமாக இருக்கிறது என ஹூன்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவர் மின்சூ கிம் தெரிவித்திருக்கிறார். #hyundaikona #KonaIronManEdition
    ×