என் மலர்
கார்

விலை உயர்வு... புத்தாண்டில் ஷாக் கொடுத்த ஹூண்டாய்..!
- உலோகங்களின் விலைவாசி உயர்வு காரணமாக விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் வாகன உற்பத்தியாளர்கள் விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
தென்கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய். இந்தியா உள்பட உலகம் முழுவதும் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. இந்திய சந்தையில் மற்ற வாகன உற்பத்தியாளர்களை போன்றே ஹூண்டாய் நிறுவனமும் விலை உயர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி நடப்பு ஆண்டில் (2026) இன்று (வியாழக்கிழமை) முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து ஹூண்டாய் மாடல் கார்களின் விலை 0.6 சதவீதம் அதிகரிக்கும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. உலோகங்களின் விலைவாசி உயர்வு காரணமாக இந்த விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வாகன உற்பத்தியாளர்கள் விலை உயர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே பிஎம்டபிள்யூ மோட்டராட், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் போன்ற நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்து இருந்த நிலையில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது.






