என் மலர்
கார்

மூன்று புது வேரியண்ட்கள், பல்வேறு புது அம்சங்கள்... கிரெட்டா EV-யை அப்டேட் செய்த ஹூண்டாய்
- கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
- 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் வரிசையில் மூன்று புதிய வேரியண்களைச் சேர்த்துள்ளது. இது மிட்ரேஞ்ச் மின்சார SUV பிரிவில் அதன் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. புதிய வேரியண்ட்கள் Excellence (42 kWh), Executive Tech (42 kWh) மற்றும் Executive (O) (51.4 kWh) ஆகும்.
கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இவற்றில் 420 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 42kWh பேக் மற்றும், 510 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும் 51.4kWh யூனிட் ஆகியவை அடங்கும். இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் ரேஞ்ச் ARAI சான்றளிக்கப்பட்டவை ஆகும்.
புதிய Excellence (42 kWh) வேரியண்ட் லெவல் 2 ADAS, 360-டிகிரி வியூ மானிட்டர், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், டேஷ் கேமரா, பின்புற வயர்லெஸ் சார்ஜர், ஓட்டுநர் மற்றும் பயணிகள் இருக்கைகள், முன்புற இருக்கைகள் வென்டிலேஷன் வசதி மற்றும் மடிக்கக்கூடிய செட்பேக் மேசையுடன் வருகிறது.
கிரெட்டா எலெக்ட்ரிக் Executive Tech (42 kWh) காரில் குரல்-செயல்படுத்தப்பட்ட பனோரமிக் சன்ரூஃப், இகோ-லெதர் சீட்கள், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள் மற்றும் பின்புறம் சன்ஷேட் விண்டோ போன்ற அம்சங்கள் உள்ளன. அதே நேரத்தில் Executive (O) (51.4 kWh) காரில் நீண்ட தூர பேட்டரி மற்றும் ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் உள்ளன.
அனைத்து கிரெட்டா எலெக்ட்ரிக் வேரியண்ட்களும் இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியை அடாப்டர் வழியாகப் பெறுகின்றன. அதே நேரத்தில் டாப் எண்ட் வேரியண்ட்களில் டேஷ் கேமரா மற்றும் வயர்லெஸ் ரியர் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த கார்களில் ஹூண்டாய் தற்போது மேட் பிளாக் மற்றும் ஷேடோ கிரே வண்ண விருப்பங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.






