என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collided"

    நெசவு தொழிலாளி கார் மோதி இறந்தார்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே ஆர்.பெத்தாம்பட்டி பகுதியைசேர்ந்தவர் துரைசாமி(வயது 49) நெசவு தொழிலாளி. இவர் தனது மொபட்டில் பெத்தாம் பட்டியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு சென்றார்.   

    எஸ் பாலம் வளைவில் அவர் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக  எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைசாமி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பலியான துரைசாமிக்கு சுமதி என்ற மனைவியும், கோபி என்ற மகனும் சாந்தி என்ற மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 6 மணிக்கு நடந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துரைசாமியின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தன. இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    பலியான துரைசாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • திருவனந்தபுரம் செல்லும் சாலையில் டெம்போ வண்டி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்குள் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே கனரக வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு நாகர்கோவில் ஒழுகின சேரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் டெம்போ வண்டி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் நின்ற கார் மீது டெம்போ மோதியது.மோதிய வேகத்தில் மோட்டர் சைக்கிளில் சென்றவரையும் இடித்து தள்ளியது. இதில் வடசேரியைச் சேர்ந்த படுகாயம் அடைந்தார் மேலும் அந்த டெம்போ ரோட்டோரத்திலிருந்து கடைக்குள் புகுந்து நின்றது இதில் அந்த பகுதியில் இருந்த ஏடிஎம் மையம் மற்றும் மூன்று கடைகள் சேதமடைந்தது விபத்து நடந்ததை எடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர் டெம்போ மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள் டெம்போ டிரைவரை பிடித்து விசாரித்த போது அவர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பது தெரிய வந்தது அவர் தனக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெம்போவை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    ×