search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Government"

    • சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின.
    • சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

    முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்து வந்த மெகா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் பா.ஜனதா-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் புதிய ஆட்சி அமைந்தது.

    ஏக்நாத்ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இது தொடர்பாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இரு பிரிவினர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சிவசேனாவின் வில்-அம்பு சின்னத்தை பயன்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை தொடர்ந்து விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி முதல் 9 நாட்கள் விசாரணை நடந்தது. இரு பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

    தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவித்தது.

    இந்தநிலையில் சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

    மேலும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது.

    மகாராஷ்டிரத்தில் 7 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வதால் உச்சக்கட்ட ஓட்டுவேட்டையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    மும்பை :

    மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 11, 18, 23 மற்றும் 29-ந் தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    முதல் கட்டமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கண்ட 7 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது.

    இதையடுத்து கட்சியினர் இன்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள்.

    இந்த 7 தொகுதிகளிலும் ஆளும் பா.ஜனதா-சிவசேனா மற்றும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    குறிப்பாக நாக்பூரில் மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நானா படோலே ஆகியோர் நேருக்குநேர் மோதுகின்றனர்.

    இந்த தொகுதியில் தலித், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இங்குதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    சந்திராப்பூர் தொகுதியை பொருத்தவரை மத்திய உள்துறை இணைமந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றியை எதிர்பார்த்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார். பா.ஜனதா தலைவரான இவரை எதிர்த்து சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுரேஷ் தனோர்கர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

    வார்தாவில் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவி சாருலதா தொகஷ், பா.ஜனதா எம்.பி. ராம்தாஸ் தாதசை எதிர்கொள்கிறார்.

    கட்சிரோலி- சிமூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அசோக் நேடேவுக்கு முக்கிய எதிராளியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாம்தியோ உசேந்தி விளங்குகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே யவத்மால் தொகுதியில் சிவசேனா எம்.பி. பாவனா காவ்லியை எதிர்த்து களம் காண்கிறார்.

    ராம்டெக் தொகுதியில் சிவசேனா எம்.பி. குருபால் தான்னேவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோர் காஜ்பாயே போட்டியில் உள்ளார்.

    பண்டாரா- கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பிரபுல் படேல் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக நானா பஞ்சபூதே களம் இறங்குகிறார். அவருக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சுனில் மேன்தே களத்தில் உள்ளார்.

    7 தொகுதிகளிலும் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுவதால் இன்று நடைபெறும் கடைசிநாள் பிரசாரத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Maharashtra #LokSabhaElections2019
    ஆபத்தில் சிக்கும் பெண்களை காப்பாற்ற எச்சரிக்கை பொத்தானுடன் கூடிய செயினை அறிமுகம் செய்ய மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    மும்பை:

    மராட்டிய மாநில சட்ட மேலவையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து உள்துறை மந்திரி தீபக் கேசர்கர் கூறியதாவது:-

    ஜி.பி.எஸ். சிப்பும், எச்சரிக்கை பொத்தானும் பொருத்தப்பட்ட விசேஷ செயினை மராட்டிய அரசு விற்பனைக்கு கொண்டு வரும். செயின் விலை ரூ.1,000 அல்லது அதற்கு குறைவாக இருக்கும். அதை பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

    ஆபத்தில் சிக்கும்போது, செயினில் உள்ள பொத்தானை அழுத்தி, பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை உஷார்படுத்தலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்படும் கண்காணிப்பு அறை மூலம் அந்த பெண்ணின் இருப்பிடத்தை அறிந்து அவரை மீட்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #WomenSafety #Maharashtra #GPSNecklaces
    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    ×