ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் இறந்துவிட்டதா.. தீயாய் பரவும் செய்தி - உண்மை என்ன?

ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா' இருந்த வீடியோ வைரல்
ratan tata's dog
Published on

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இதனிடையே, ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக வாட்சப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அந்த செய்தியில், ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்து விட்டது. மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com