என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bharat ratna"

    • அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது.
    • தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது

    நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான 'பாரத ரத்னா' விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை உள்ளடக்கிய 'திபெத்திற்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற மன்றம்' சமீபத்தில் இது தொடர்பான முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

    பிஜேடி மாநிலங்களவை எம்.பி. சுஜீத் குமார் தலைமையிலான இந்த மன்றத்தில் பாஜக மற்றும் ஜே.டி.யு உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

    தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளதாக மன்ற ஒருங்கிணைப்பாளர் சுஜீத் குமார் தெரிவித்தார்.

    அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது. 14வது தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை குழு தெரிவித்தது.

    திபெத்துக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரஸ் சமீபத்தில் நிறைவேற்றிய மசோதாவை மன்றம் பாராட்டியது. நமது நாட்டின் நாடாளுமன்றத்திலும் இதேபோன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று எம்பிக்கள் குழு அழுத்தம் கொடுத்துள்ளது.

    1959 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வரும் தலாய் லாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

    • விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்
    • 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான விராட் கோலி, தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுகட்டி ஓய்வை அறிவித்தார்.

    123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி செய்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். 

    • மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர்.
    • ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தீர்மானத்தை தாக்கல் செய்ய, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாகன் புஜ்பா், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் வடேட்டிவார் ஆகியோர் ஆதரித்து பேசினர்.

    மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர். அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் மகாத்மா பூலே என அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தெரிவித்தார்.

    ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    • எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
    • விருது பெற்ற அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

    நாட்டின் மிக உயரிய விருதை அத்வானி பெற்றிருப்பது பா.ஜ.க. மூத்த தலைவர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அத்வானிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எல்.கே.அத்வானியும் உடனிருந்தார். தனக்கு விருது வழங்கியதை ஏற்கும் வகையில் அத்வானி நன்றி தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இதையடுத்து, பிரதீபா அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டின் மிக உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதில் முழு குடும்பமும் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் முழு வாழ்க்கையையும் நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.
    • தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அடிப்படையிலிருந்து உழைப்பால் உயர்ந்து தேசத்தின் ஏழாவது துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறைகளை கையாண்ட நிர்வாக திறன் படைத்தவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.

    மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்கள், அத்வானி ஜி அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

    தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    தன்னுடைய வயதளவு இருக்கும் அனுபவங்களை வைத்து, தேசத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும், பெருமதிப்பிற்குரிய மூத்த அரசியல்வாதியான எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு, தேசத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.

    • விருது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து.
    • அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.

    பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    அத்வானிக்கு தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து ஜெய்சங்ர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது தேசிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும்.

    பல ஆண்டுகளாக, பாரதத்தின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய தருணங்களை அவர் பல வழிகளில் வடிவமைத்துள்ளார். அரசாங்கத்தில் தலைமை மற்றும் பொது வாழ்வில் அவரது பங்கு உத்வேகம் அளித்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடன், நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பாரத ரத்னா விருது ஒரு நபராக எனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

    என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது.
    • அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத ரத்னா விருது எனது லட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து, பாரத ரத்னா விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.

    முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர்.

    மேலும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.

    ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது

    அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
    • எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×