என் மலர்

  நீங்கள் தேடியது "Advani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதிய ஜனதா கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி என்று ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டி உள்ளார்.
  புதுடெல்லி:

  முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான எல்.கே. அத்வானி இன்று 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  பிரதமர் மோடி

  இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

  "அத்வானி ஒரு நல்ல வழிகாட்டி" என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். மேலும் "அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அவரது புலமை, தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறன் கொண்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்" என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

  "கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி. கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜனதாவில் இருந்து விலகியபோது அத்வானி கண்ணீர் மல்க எனக்கு விடை கொடுத்தார் என்று சத்ருகன்சின்கா கூறி உள்ளார்.
  புதுடெல்லி:

  சத்ருகன் சின்கா சமீபத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.

  காங்கிரஸ் சார்பில் பாட்னா சாகிப் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  பா.ஜனதாவில் நான் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன். வாஜ்பாயின் பேச்சைக்கேட்டு மனதை பறிகொடுத்து பா.ஜனதாவில் சேர்ந்தேன். அப்போது கட்சியில் ஜனநாயகம் இருந்தது.

  இப்போது தனிநபர் ஆதிக்கம் வந்துவிட்டது. எனவேதான் பா.ஜனதாவில் இருந்து விலக முடிவு செய்தேன். இதற்காக அத்வானியை சந்தித்து ஆசி பெற்றேன்.  அப்போது அவர் எனக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தார்.

  பா.ஜனதாவில் இருந்து விலக வேண்டாம் என்று அவர் என்னை தடுக்கவில்லை. அதற்கு பதில் அவர் எனது அன்பு என்றென்றும் உண்டு என்று ஆசீர்வதித்தார்.

  இப்போது நான் சரியான திசைக்கு வந்துள்ளேன். அந்த திசை நல்ல திசையாகவும் உள்ளது.

  அத்வானியை அவர்கள் மிகவும் அவமரியாதை செய்கிறார்கள். அதை தட்டிக்கேட்டதால் என்னை பணிய வைக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் பணியவில்லை.

  எனவே கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதிக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. மோடி மிதமிஞ்சிய நம்பிக்கையில் இருக்கிறார்.

  பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று நம்புகிறார். 23-ந்தேதி அவருக்கு உண்மை தெரிந்து விடும்.

  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எனது நண்பர்களில் ஒருவர் ஆவார். அவர் இரும்புப் பெண்மணி. அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறேன்.

  இவ்வாறு சத்ருகன் சின்கா கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
  போபால்:

  மத்திய பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:

  “குஜராத்தில் 2002-ல் மதக்கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

  2002-இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.  கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார்.”

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை தேசிய தலைவர் அமித் ஷா இன்று திடீரென்று சந்தித்தது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmitShah #AmitShahmet #AmitShahmetJoshi #AmitShahmetAdvani
  புதுடெல்லி:

  பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளிக்கவில்லை. அத்வானி தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் குஜராத் மாநிலம், காந்தி நகர் தொகுதியில் இந்த முறை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

  இதேபோல், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு பதிலாக சத்யதேவ் பச்சவுரி நிறுத்தப்பட்டுள்ளார்.

  பாஜக தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர் ஆரம்பகாலத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

  இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை சந்தேகிக்கும் எதிர்க்கட்சியினர் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். அவரது கருத்துக்கு மாறுபட்ட வகையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி எதிர்கருத்து ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

  கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை தேச விரோதிகள் என்று சித்தரிக்க கூடாது என்னும் வகையில் அவர் தெரிவித்த கருத்து பாஜகவில் நிலவிவரும் பனிப்போரின் உச்சகட்டமாக பார்க்கப்பட்டது.

  இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களின் இல்லங்களை தேடிச்சென்று தேசிய தலைவர் அமித் ஷா இன்று மாலை சந்தித்தார்.

  இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmitShah #AmitShahmet #AmitShahmetJoshi #AmitShahmetAdvani 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தெரிகிறது. #LokSabhaElections2019 #BJP
  புதுடெல்லி:

  75 வயதை தாண்டிய பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த முறை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து வருகிறது.

  தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை மூத்த தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க பா.ஜனதா முடிவு செய்திருந்தது.

  புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு மக்கள் இடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக பா.ஜனதா நம்புகிறது.

  இதனால் மூத்த தலைவர்கள் மீதான தனது முடிவை வேட்பாளர் தேர்வில் மாற்றிக் கொண்டுள்ளது.


  இதன் காரணமாக முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் மீண்டும் டிக்கெட் கொடுக்கவில்லை.

  அத்வானியின் காந்திநகர் தொகுதி அமித்ஷாவுக்கும், முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதி சத்யதேவ் பச்சோரிக்கும் ஒதுக்கப்பட்டது.

  இந்த வரிசையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பா.ஜனதாவினர் அவரிடம் எடுத்து கூறி போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

  மத்திய பிரதேச மக்களால் ‘தாய்’ என்று அழைக்கப்படும் சுமித்ரா மகாஜனுக்கு வருகிற 12-ந்தேதி 76 வயது நிறைவடைகிறது. ஆனாலும் அவரது உண்மையான வயது 78 என்று கூறப்படுகிறது.

  1989 முதல் பா.ஜனதாவின் கோட்டையாக இந்தூர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றார். இந்த முறை இந்த தொகுதியில் அவருக்கு பதிலாக முக்கிய தலைவரான கைலாஷ் விஜய் வர்க்கியா நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இவர் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்தூரில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. #LokSabhaElections2019 #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் தொகுதி அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். #Advanitoclear #UmaBharti #clearthemist
  புதுடெல்லி:

  இந்திய அரசியலில் மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி(91).  குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பாராளுமன்ற தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற இவருக்கு இந்த தேர்தலில் அந்த தொகுதி ஒதுக்கப்படவில்லை. 

  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இந்த தேர்தலில் காந்தி நகர் தொகுதியில்  போட்டியிடுகிறார். இதன் மூலம் பாஜகவில் அத்வானியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பேசப்படுகிறது. 

  பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தற்போது அனுபவித்து வருவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் குற்றம்சாட்டியுள்ளது. 

  இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும், பாஜக துணைத்தலைவருமான உமா பாரதி அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக அத்வானி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  ‘நரேந்திர மோடி இன்று பிரதமர் பதவியில் இருக்கும் அளவுக்கு பாஜகவை பலமான கட்சியாக உருவாக்கியதில் ஆரம்பகாலத்தில் இருந்தே முக்கிய சக்தியாக திகழ்ந்தவர் அத்வானி. ஆனால், தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் அவர் எவ்விதமான பெரிய பதவியையும் எதிர்பார்த்ததில்லை.

  தேர்தலில் போட்டியிடுவதாலோ, போட்டியிடாமல் போவதாலோ அவரது தகுதியில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு விடப்போவதில்லை. 

  இந்த தேர்தலில் அவர் ஏன் போட்டியிடவில்லை? என்னும் கேள்விக்கு நானோ மற்றவர்களோ விளக்கம் அளிப்பது முறையாக இருக்காது. இவ்விவகாரத்தில் தன்னை சுற்றியுள்ள பனித்திரையை விலக்கும் வகையில் அத்வானியே விளக்கம் அளிப்பது தான் சரியாக இருக்கும்’ என உமா பாரதி குறிப்பிட்டார். #Advanitoclear #UmaBharti #clearthemist  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் அத்வானி எம்.பி.யாக உள்ள காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என குஜராத்தில் உள்ள பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். #LSpoll #BJPworkers #AmitShah #Advani #GandhinagarLSpoll
  அகமதாபாத்:

  பாஜக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி  குஜராத்தில் உள்ள காந்திநகர்  பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

  இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என இம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக, காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேஜல்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் கிஷோர் சவுகான் கூறுகையில், ‘தேசிய தலைவரான அமித் ஷா, காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.  காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சார்கேஜ் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னர் பதவி வகித்தவர் என்ற வகையில் இங்குள்ள அனைவரையும் அமித் ஷாவுக்கு நன்றாக தெரியும்’ என குறிப்பிட்டார்.

  இதே கருத்தை வலியுறுத்திய பாஜக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் பட்டேல்,  காந்திநகர் தொகுதியில் போட்டியிட இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே இங்கு அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

  பாஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1996 நீங்கலாக காந்திநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #LSpoll #BJPworkers #AmitShah #Advani  #GandhinagarLSpoll
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes
  புதுடெல்லி:

  பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இன்று 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது அறிவாற்றல் அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது. இந்திய அரசியலில் அவரது தாக்கம் மகத்தானது. தன்னலம் கருதாமல் விடா முயற்சியுடன் கட்சியை கட்டமைத்து தொண்டர்களை சிறப்பாக வழிநடத்தியவர்’ என அத்வானியை பாராட்டியுள்ளார்.


  இதேபோல் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, மம்தா பானர்ஜி, சித்தராமையா, அசோக் கெலாட், ராஜ்யவர்தன் ரத்தோர், சுரேஷ் பிரபு, ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற மக்களவை ஒழுங்குமுறை குழு தலைவராக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மீண்டும் நியமித்துள்ளார். #BJP #Advani #EthicsPanel
  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக புகார்கள் குறித்து விசாரிக்க மக்களவை ஒழுங்குமுறை குழு உள்ளது. நன்னடத்தை விதிமுறைகளை மீறும் எம்.பி.க்கள் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரம் இக்குழுவிற்கு உள்ளது.

  இக்குழுவின் தலைவராக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். இந்நிலையில், இந்த பதவியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவரை மீண்டும் இன்று  நியமித்துள்ளார்.

  இதேபோல், பாராளுமன்ற கூட்டங்களில் பங்கேற்காத உறுப்பினர்களை கண்காணிக்கும் குழுவின் தலைவராக பி.கருணாகரன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


  மேலும், அரசு அளித்த வாக்குறுதிகள் தொடர்பான குழுவின் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிஷான்க், அவையில் முன்வைக்கப்பட்டும் மசோதாக்கள் கண்காணிப்பு குழுவின் தலைவராக சந்திரகாந்த் பி கைரே மற்றும் துணை சட்டங்கள் குழுவின் தலைவராக திலிப்குமார் மன்சுக்லால் காந்தி ஆகியோரும் மீண்டும் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மக்களவை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Advani #EthicsPanel
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மக்களுக்காகவே வாந்தவர் என டெல்லியில் இன்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #PMModi #AtalBihariVajpayee
  டெல்லி:

  பாஜகவின் நிறுவன தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமராகவும் பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயோதிகம் காரணமாக காலமானார். அவரது உடல் மறுநாள் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் வாஜ்பாய்க்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.

  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நிஹாரிகா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.  பிரதமர் மோடி பேசுகையில், “வாஜ்பாய் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் அரசியலுக்கு வரும் போது இங்கு ஒரு குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இருந்தது. எந்த அழுத்தத்துக்காகவும் தனது முடிவில் பின்வாங்காதவர். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே அவர் இருந்தாலும் தனது கொள்கையில் என்றும் சமரசம் செய்தது இல்லை” என பேசினார்.

  பாஜக மூத்த தலைவர் அத்வானி, “பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால், வாஜ்பாயின் நினைவு கூட்டத்தில் பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. 65 ஆண்டுகளாக அவருடன் பழகியிருக்கிறேன். ஒன்றாக சினிமா பார்த்துள்ளோம். ஒன்றாக பல இடங்களில் சுற்றியுள்ளோம்” என தனது நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo