என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்கே அத்வானி
    X
    எல்கே அத்வானி

    எல்.கே.அத்வானியின் 94வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் வாழ்த்து

    பாரதிய ஜனதா கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி என்று ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவருமான எல்.கே. அத்வானி இன்று 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும், வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

    "அத்வானி ஒரு நல்ல வழிகாட்டி" என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார். மேலும் "அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட அவரது புலமை, தொலைநோக்கு மற்றும் அறிவுத்திறன் கொண்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்" என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

    "கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் அத்வானி. கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்" என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×