search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pmmodi"

    • அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல.
    • இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது கைகளால் தொட்டு பால ராமரின் கற்சிலைக்கு உயிரூட்டியதற்கு வட இந்திய சங்கராச்சாரிகளுள் ஒருவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "சூத்திரரான மோடி ராமர் சிலைக்கு எப்படி பிராண பிரதிஷ்டை செய்யமுடியும்? அது நாட்டுக்கே பெருங்கேடு விளையும்!"-என்றெல்லாம் ஆரூடம் கூறியிருக்கிறார். இது தானே சனாதனம். பிரதமரே ஆனாலும் சூத்திரனாகப் பிறந்த மோடி தனது குல தருமத்தை மீறுவது கூடாது. அதாவது, பிராமணரல்லாத எவருக்கும் கடவுளைப் பிரதிஷ்டை செய்யும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது தான் சனாதனம்.

    மோடியின் இந்த மரபு மீறலை பெரும்பான்மையான சனாதன சக்திகள்-குறிப்பாக, பார்ப்பனர்கள் அனுமதிப்பதும், அமைதி காப்பதும் பிராமணரல்லாத பிற அப்பாவி இந்துக்களை ஏய்க்கும் ஒரு மோசடி அரசியல் உத்தியே ஆகும்.


    உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று யாராவது இந்துக்கள் இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சனாதனம் இந்துக்களின் சுதந்திரத்தை எவ்வாறெல்லாம் பறிக்கிறது என்பதை இதன்மூலம் அறியலாம்.

    அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அரைகுறை நிலையில் அவசரம் அவசரமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

    இது ஆன்மீக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழா. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்கபரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் சதிவிழா.


    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் எதையும் செய்ய முனைப்புக் காட்டாத பா.ஜ.க. கும்பல், இந்துப் பெரும் பான்மைவாதம், இசுலாமிய-கிறித்தவ வெறுப்பு, ஜெய் ஸ்ரீராம் என மதத்தின் பெயரால், இந்திய மக்களை இந்துக்கள் என்றும் இந்து அல்லாதவர்கள் என்றும் பிளவு படுத்துகிற மக்கள்விரோத அரசியலையே 'இந்துத்துவா' என்னும் பெயரில் நடத்தி வருகின்றனர்.

    ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரச்சார விழா.

    இதனை அனைத்துத் தரப்பு இந்து மக்கள் யாவரும் உணர்ந்து, சங்கபரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    • புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
    • பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பிரதமா் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் திருச்சி சென்றடையும் பிரதமா் மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

    மதியம் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைப் பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா். விமானப் போக்குவரத்து, ரெயில், சாலை, கப்பல், உயா் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடா்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

    பின்னா், பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி தீவுக்கு செல்லும் பிரதமா் அங்கு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறாா். ஜனவரி 3-ந்தேதி லட்சத்தீவின் கவரத்தியில் ரூ.1,150 கோடி மதிப்பில் தொலைத்தொடா்பு, குடிநீா், சூரிய சக்தி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் தொடா்பான பல வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

    திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் ரூ.1,100 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய முனையக் கட்டிடத்தை பிரதமா் திறந்து வைக்க உள்ளாா்.

    இந்த 2 அடுக்கு புதிய முனையக் கட்டிடம் ஆண்டு தோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தின் பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா் பிரதமா் மோடி. சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூா்-மேட்டூா் அணைப் பிரிவில் 41.4 கி.மீ. இரட்டை ரெயில் பாதை திட்டம், மதுரை-தூத்துக்குடி இடையே 160 கி.மீ. தொலைவிலான இரட்டை ரெயில் பாதை திட்டம், திருச்சி-மானாமதுரை-விருதுநகா் ரெயில் பாதை மின்மய மாக்கல், விருதுநகா்-தென்காசி சந்திப்பு மின்மய மாக்கல், செங்கோட்டை-தென்காசி சந்திப்பு-திருநெல்வேலி-திருச்செந்தூா் ரெயில்பாதை மின்மயமாக்கல் திட்டங்கள் இதில் அடங்கும்.

    சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து திறனை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டில் பொருளாதார வளா்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டங்கள் உதவும்.

    ஐந்து சாலைத் திட்டங்கள் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 81 திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கி.மீ. நான்குவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ல் கல்லகம்-மீன்சுருட்டி பிரிவில் 60 கி.மீ. 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ல் செட்டிகுளம்-நத்தம் பிரிவில் 29 கி.மீ. நான்குவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ல் காரைக்குடி-ராமநாதபுரம் பிரிவில் 80 கி.மீ. இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ-ல் சேலம்-திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையின் 44 கி.மீ. தொலைவு நான்குவழிச் சாலை ஆகியவை இதில் அடங்கும்.

    திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்தரகோச மங்கை, தேவிப்பட்டினம், ஏா்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வா்த்தக நகரங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.

    தேசிய நெடுஞ்சாலை-332ஏ முகையூா் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைப்பது உள்பட பல்வேறு முக்கிய சாலைத் திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறாா். இத்திட்டம், உலகப் பாரம்பரியச் சின்னமான மாமல்லபுரத்துக்கு சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

    ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களைப் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

    இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் எண்ணூா்-திருவள்ளூா்-பெங்களூர்-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி பிரிவில் ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் ஐபி 105 (சாயல்குடி) வரை 488 கிலோ மீட்டா் நீளமுள்ள இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் 697 கி.மீ. தொலைவிலான விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகியவை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும்.

    கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் திட்டம் 2-ன்கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

    சென்னை காமராஜா் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2 (ஆட்டோமொபைல் ஏற்றுமதி, இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூா்வாரும் கட்டம்-5) நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படவுள்ளது. இது, நாட்டின் வா்த்தகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்று ஆகும்.

    சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைக்கும் பணிகளுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

    கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த உலை ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டதாகும்.

    திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) 500 படுக்கைகள் கொண்ட மாணவா் விடுதியும் திறந்துவைக்கப்படவுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
    • விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மாலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடி, ரெயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கு விரைகிறார். பின்னர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு, கட்டாக் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார்.

    • கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் திறமையுடன் கூடிய மனித வளத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.
    • மத்திய அரசின் பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    நாட்டில் அனைத்துத் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதிசெய்திட முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை.

    கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு மாணவர் நலச்சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 

    தமிழ்நாட்டிலுள்ள ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு தினை உணவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்.
    • தினை உற்பத்தி செய்யும் விவசாயிகளில் 85% மேலானோர் சிறு விவசாயிகள்.

    இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அடுத்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.  அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தினை வகை உணவுகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் விளைவிக்கப்படும் சிறுதானிய பயிர்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தினை உள்ளிட்ட சிறுதானிய பயிர் உற்பத்தி செய்யும் விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் மேலானோர் சிறு விவசாயிகள் என்ற பிரிவில் உள்ளதால், இந்த தானியங்களின் நுகர்வு உலக அளவில் அதிகரிப்பதுடன் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என்று மத்திய அரசு கருதுகிறது. 


    இந்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று அனைத்து உறுப்பினர்களுக்கும் மத்திய அரசு சார்பில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் விதவிதமான தினை வகை உணவுகள் இடம் பிடித்திருந்தன. பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

    இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தமது டுவிட்டர் பதிவில், 2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
    • நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

    சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


    உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.

    மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொருளாதார நிபுணர் ஆட்சியில் 10வது இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆனது.
    • டீ விற்றவர் ஆட்சியில் 10ல் இருந்து 5வது இடத்தை அடைய 8 ஆண்டுகள் ஆனது.

    குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

    2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, ​​புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் (மன்மோகன் சிங்) நமது பிரதமராக இருந்தார்.

    இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுகளில், அவர்கள் என்ன செய்தாலும், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது இடத்திற்கு மாறியது. இதன் மூலம் 11வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரம், 10வது இடத்தைப் பெற பத்து ஆண்டுகள் ஆனது.

    2014-ல் நீங்கள் ஒரு சாய்வாலாவுக்கு (டீ விற்பவர்) ஆட்சியைக் கொடுத்தீர்கள். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று ஒரு போதும் கூறவில்லை. ஆனால், மக்களின் பலம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது.

    11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (காங்கிரஸ்) ஆட்சியையும், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (பாஜக) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும்.
    • பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சூரத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.நேற்று ஒரே நாளில் கேடா மாவட்டம், நேத்ராங், பருச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதி மற்றும் சூரத் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:

    குஜராத்தின் தற்போதைய புதிய தலைமுறையினர் அகமதாபாத் மற்றும் சூரத் தொடர் குண்டு வெடிப்புகளைப் பார்த்ததில்லை. தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது. 2014- ஆண்டு (லோக்சபா தேர்தல்) உங்களின் ஒரு வாக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

    இப்போது அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது எல்லைகளில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு முன் 100 முறை யோசிக்கிறார்கள். ஏனென்றால அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்தியா தாக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். நர்மதா அணை திட்டத்திற்கு  எதிராக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

    அணை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்த்தவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட்டு வழங்கியவர்களை குஜராத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. சூரத் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்டித ஜவஹர்லால் நேரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார், ஆனால் அது 50 ஆண்டுகளாக முடங்கியது.

    அவர்கள் (போராட்டக்காரர்கள்) யாரும் இந்த அணை திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்ற நிலையை உறுதி செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஆம் ஆத்மி டிக்கெட் கொடுத்தது. மூன்று தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்கும் இதுபோன்றவர்களை நம் மாநிலத்தில் காலடி வைக்க அனுமதித்தால் அது பாவம் செய்வது போன்றது.

    மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​மெட்ரோ ரயில் திட்டம், சூரத் நகருக்கு விமான நிலையம் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இரட்டை எஞ்ஜின் அரசு (மத்தியில் பாஜக ஆட்சி) வந்த பிறகு, சூரத்தில் விமான நிலையம் அமைந்தது. மெட்ரோ பணிகள் தொடங்கியுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை எஞ்ஜின் அரசுகள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு.
    • பாஜகவின் வாக்குறுதிகள் பொய்யாகி விட்டதாக காங்கிரஸ் கருத்து.

    ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது அங்குள்ள தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல்வானி கூறியுள்ளதாவது: பாஜக ஆட்சி ஜம்மு காஷ்மீரை பல துறைகளில் அழித்து விட்டது, அடையாளம், அந்தஸ்து, வேலைகள், நிலங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஜம்மு காஷ்மீர் இழந்து விட்டது.

    அதை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காஷ்மீரில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் நிர்வாகம் தவறி விட்டது. காஷ்மீர் சிறுபான்மையினரும், ஜம்மு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பற்ற பகுதிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சம்பளமும் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஒளிமயமான எதிர்காலம், விலைவாசி கட்டுப்பாடு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று அவர்களது (பாஜக) வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. மக்கள் சுரண்டப்படுகின்றனர். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை தவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை. பிற மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீர் வரலாற்று ரீதியாக மிகவும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டது. ஆனால் இப்போது அது அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்.
    • குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு.

    ஆமதாபாத்:

    குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மோர்பியில் நடந்த சோக நிகழ்வு என்னை கவலையடையச் செய்துள்ளது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    குஜராத் மாநிலம் மோர்பியில் நிகழ்ந்த சோகமான சம்பவத்தைப் கேள்விப்பட்டு வேதனையடைந்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    குஜராத் விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி உடனடியாக அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி உள்ளார். இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    இதேபோல் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

    குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், மோர்பி பாலம் விபத்தில் சிக்கி பல அப்பாவி உயிர்கள் பலியாகியதில் ஆழ்ந்த வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் வேண்டுகிறேன். அதே வேளையில், சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்டோரும் மோர்பி கேபிள் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியில் மத்திய அரசு தீவிரம்
    • ஒராண்டில் குஜராத்தில் 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இலக்கு.

    விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பணியிடங்களுக்கு நியமன கடிதங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அப்போது அவர் வாழ்த்து தெரிவித்தார். 

    குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் கூறினார். குஜராத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளும், சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கைதான் முக்கிய காரணம் என்றார்.

    செல்பேசி செயலி மற்றும் வேலை வாய்ப்பு இணையதளம் ஆகியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பட்டார். இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

    2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக இந்தியா முன்னேற இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், சமூகத்திற்கும், நாட்டிற்குமான தங்களது கடமையை நிறைவேற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். வேலை கிடைப்பதை தங்கள் முன்னேற்றத்தின் இலக்காகக் கொண்டிராமல் இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு, திறன் பெற வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

    ×